For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு.! -15 பேர் உயிரிழப்பு.!

12:54 PM Feb 26, 2024 IST | admin
கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு    15 பேர் உயிரிழப்பு
Advertisement

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ (Burkina Faso) எனும் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்று கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. அந்த சமயம் திடீரென உள்ளே புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தங்கள் துப்பாக்கிகளால் தேவாலயத்தில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 2 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

Advertisement

புர்கினா பாசோ நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. 2022-ல் அந்நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக் குழுக்கள் உருவாகி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் அந்நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கடந்த 18 மாதங்களில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

Advertisement

இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று எசக்கானே என்ற கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை அக்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களிலும் 3 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது

இந்த துப்பாக்கி சூடு பற்றி அறிக்கை தெரிவித்த உள்ளூர் மாவட்ட அதிகாரி கூறுகையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், தங்கள் நாட்டில் இதுபோன்று, மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது போன்ற தாக்குதல்கள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

2011 – 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பிறகு இம்மாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் இதுவரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 20 லட்சம் பேர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் ஓர் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது

Tags :
Advertisement