தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு!

05:09 PM Jun 15, 2024 IST | admin
Advertisement

டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Advertisement

டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் கடந்த 2010, அக். 21-இல் ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய், காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இது தொடா்பாக காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆா்வலர் சுஷில் பண்டிட், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்குப் பதிவு செய்ய 2010, நவம்பர் 27-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்தக் கூட்டம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட்டித்தின்கீழ் விசாரிக்க துணைநிலை ஆளுநர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணையை நடத்த துணைநிலை ஆளுநர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

Tags :
Arundhati RoyCase registeredUAPAUnlawful Activities Prevention Actஅருந்ததிராய்
Advertisement
Next Article