For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டு முறை ரத்து-சுப்ரீம் கோர்ட் அதிரடி!

05:59 PM Jul 21, 2024 IST | admin
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டு முறை ரத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி
Advertisement

ங்கதேசத்தில் அரசுவேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் உத்தரவு செல்லாது எனக்கூறி இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தியது.

Advertisement

1971ஆம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பல்வேறு தரப்பு எதிர்ப்புகளுக்குப் பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு உத்தரவை அப்போதைய ஆளும் கட்சி ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதி இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அந்த வகையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வங்கதேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது.

குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையொட்டி நடந்த போலீஸ் மற்றும் மாண்வர்கள் மோதலில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் , போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதோடு, பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மூடப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தை முன்னிட்டு வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ,அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் போராட்டத்திற்கு காரணமாக இடஒதுக்கீடு குறித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து வங்கதேச சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில், "அரசு வேலை வாய்ப்புகளில் 93 சதவீதம் மதிப்பெண் அடிப்படையிலும், மீதமுள்ள 7 சதவீதம் 1971ஆம் ஆண்டு வங்கதேச சதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் வழங்கப்படும்" என உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement