ஆளுங்கட்சி பாஜக மீது மட்டுமே அவப்பெயர் வரட்டும் என்று நினைக்கலாமா?
நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசிய நாட்டின் விரோதிகளையும் பேசவும் வேண்டும் அதில் என்ன எதிர் கட்சிகளுக்கு தயக்கம். இரு சார்பு மீதும் இவர்கள் எதிர் வினை ஆற்றினால் அதில் நேர்மை உண்டு.
நாடாளுமன்றத்தில் நடந்த புகை குண்டு வீச்சு அதன் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியாகச் சொல்லி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.நாடாளுமன்றம் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் பொதுவானதுதான் நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அது அத்தனை மன்ற உறுப்பினர்களையும் சார்ந்தது தானே ஒழிய நாடாளுமன்றத்தை ஆளுகிற அமைப்பின் மீது மட்டும்குறை சொல்லக்கூடாது. பாதுகாப்பில் ஏற்படுகிற குளறுபடி என்பது அசம்பாவிதமாகவும் இருக்கலாம் அந்த வகையில் நாடாளுமன்றத்தின் மீது நடந்த அந்த புகைக்குண்டு வீச்சை நாங்களும் கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லியிருக்க வேண்டும். அவையில் இருந்து எம்பிக்கள் நீக்க பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், நாட்டின் விரோதிகள்அமைதியின்மையை ஏற்படுத்தி தியாக தீபம் பகத்சிங் பெயரை சொல்லி திரிவதை பற்றி இந்த எதிர் கட்சிகள் பேசவும் இல்லை…ஏன்?
உலகின் வலிமைமிக்க இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அனைவரும் சேர்ந்து அதன் மாண்பை காப்பாற்ற வேண்டுமே ஒழிய ஏதாவது நடக்கட்டும் இந்த ஆளுங்கட்சி பாஜக மட்டுமே அவப்பெயர் வரட்டும் அதையே சந்தர்ப்பசமாகக்கொண்டு எதிர்க்கட்சிகளாகிய நாம் போராட்டத்தை தொடங்கலாம் என்பது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல எந்த விதத்திலும் அது ஒரு அரசியல் சரித்தன்மையுமாகாது. இரு சார்பு மீதும் இவர்கள் எதிர் வினை ஆற்றினால் அதில் நேர்மை உண்டு.அதே போல புகை குண்டு வீசிய நாட்டின் விரோதிகளையும் பேசவும் வேண்டும் அதில் என்ன எதிர் கட்சிகளுக்கு தயக்கம்.
பொறுப்புணர்ச்சியும் தேசப்பற்றும் முதலில் முக்கியம்! தேசத்திலோ வெளியிலிருந்தோ எங்கு தீவிரவாதம் தென்பட்டாலும் அதைக் கூட்டினைந்து அடியோடு ஒழிப்பது என்பதற்கு பெயர்தான் தேச இறையாண்மை. அந்த விஷயத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்றெல்லாம் பேதம் கிடையாது.
இதற்கிடையே நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அவர்கள் பிளான் ஏ மற்றும் பிளான் பி என இரண்டு திட்டங்களை வைத்திருந்தார்களாம்.
பிளான் பி: அதாவது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தத் திட்டம் தோல்வி அடைந்தால் பிளான் பி ஒன்றையும் வைத்திருந்தார்களாம். அதாவது திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், பிளான் பி ஒன்றை வைத்திருந்ததாக இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா விசாரணையின் போது போலீசாரிடம் கூறியிருக்கிறர். சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் நாடாளுமன்றத்தின் உள்ளே புகை குப்பிகளைப் போட்டு ரகளையில் ஈடுபட்ட நிலையில், நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வளாகத்தில் ரகளை செய்தவர்கள். இதுதான் அவர்களின் பிளான் ஏ... ஒருவேளை நீலம் மற்றும் அமோலால் சில காரணங்களால் நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், அவர்களுக்குப் பதிலாக மகேஷும் கைலாஷும் நாடாளுமன்றம் நோக்கி வருவார்கள் என சதி செய்துள்ளனர்.
கலர் புகைக் குண்டுகளை வீசி, ஊடகங்கள் முன் முழக்கங்களை எழுப்புவார்கள். இதுதான் அவர்கள் பிளான் பி ஆக இருந்துள்ளது. இருப்பினும், மகேஷ் மற்றும் கைலாஷ் ஆகியோரால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த குருகிராமில் உள்ள விஷால் சர்மா என்ற விக்கியின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதன் காரணமாகவே அமோல், நீலம் என்ன ஆனாலும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மிக மோசமான சம்பவம் அரங்கேறியது. 2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், லோக்சபா நடந்து கொண்டிருந்த போது சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் கேலரியில் இருந்து லோக்சபாவில் குதித்துப் புகைக் குண்டுகளை வீசி, முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த சில எம்பிக்களே அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் குற்றம் இடைஞ்சலாக இந்த போராட்டத்தை அதில் இணைத்துக் கொள்கிறார்கள் என்றால் எதிர்கட்சிகளின் நோக்கம் நாட்டின் பொது அமைதிக்கு பங்கமாகத்தான் இருக்கிறது . ஆளுங்கட்சி எதிர்க்க காரணங்கள் தேடுபவர்கள் எத்தைத் தின்றால் பித்தம் தீரும்என்று அலையக்கூடாது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூட்டாகவும் ஏதேனும் இம்மாதிரி இடைஞ்சல்கள் ஏற்படுகிற போது தேசிய நலனை கருத்திலும் கொள்ள வேண்டும்.