இப்போதாவது அந்த விவசாயிகள் மசோதா குறித்து யோசிக்கலாமா?
இதை எழுத நினைத்தபோது, கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக திருப்பூர் பின்னலாடை தொழில் செய்துவரும் எனது மைத்துனர் சொன்ன விஷயம்தான் என் நினைவில் முதலில் வந்தது. கடுமையான சோதனைகளை தாண்டி, இழப்பதற்கு எதுவும் இல்லை என்று நிலைய தாண்டி நின்ற அவர்களின் அனுபவம் சொல்லும் பாடம் மிக முக்கியமானது. தமிழகதத்தில் திருப்பூர் பின்னலடை தொழில் ஒரு மிகப்பெரிய வேலை வாய்ப்பை உறுவாக்கும் தொழில். அந்த தொழில் இன்று வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. காரணம் கடுமையான GST, மோசமான மின்சார கட்டணம், வேலையாட்கள் பிரச்சினை, சாயக்கழிவு நீர் என்று பல பிரச்சினைகள் இருக்கலாம்.
தமிழகத்தில் ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் போதும் எளிதாக தீர்த்துவிட முடியும். ஆனால் தீர்க்கமுடியாதா, மிக முக்கியமான பிரச்சின்னை நூல் விலையே. ஆம், இந்த நூல் விலையை வைத்துத்தான் அந்த தொழில் இருக்கிறது. மற்றவை எல்லாம் அதை சார்ந்த, அதன் அடிப்படையில் அமையும் மற்ற விஷயஙகளே.. !ஒரு ஆர்டர் எடுக்கும்போது இருக்கும் நூல்விலை, அது மேலே போனாலும், கீழே போனாலும் பிரச்சினைகள் கொடுக்கிறது. ஆம மேலே போனால் அது உயர்ந்துவிட்டது என்று கூடுதலாக விலை கேட்க முடியாது, ஆனால் குறைந்து விட்டால், நூல்விலைதான் குறைந்துவிட்டதே, அதனால் குறைத்துகொடு என்று கிளையண்ட் கேட்கிறான், ஏனெனில் அந்த அளவிற்கு போட்டி. அதை செய்யாவிட்டால் அடுத்த ஆர்டர் கிடைக்காது என்று சமரசம் செய்து கொள்பவர்களால், விலை அதிகமாகும்போது பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அதனால் அவர்கள் தொழில் என்பது நிலையற்ற இந்த நூல்விலைய மையப்படுத்தியே இயங்குகிறது. அந்த நூல்விலையை நிலையாக்க முடியுமா? முடியும். நூல் உற்பத்தியாளர்களுக்கு தேவையான பருத்தி நிலையான விலையில் கிடைத்தால் அதை அவர்களால் செய்ய முடியும்.
ஆனால் அதை விவசாயிகளால் விற்க முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்த விலைக்கு நான் உனக்கு பருத்தி தருகிறேன் என்று ஒரு புரிதலுடன் அவன் பருத்தி உற்பத்தி செய்கிறான். ஆனால் பருத்தி விலைந்தபோது, ஏராளமான பருத்தி மார்கெட்டுக்கு வருகிறது. அதன் விலை வீழ்கிறது. அதனால் அந்த ஒப்பந்தம் செய்த நூல் ஆலைக்காரர்கள் பேருக்கு சில குவிண்டால்களை வாங்குவதோ அல்லது அதன் தரம் சரியில்லை என்று சொல்லி வாங்காமல் தவிர்க்கிறார்கள். அதனால் விவசாயி கடும் நஷ்டமடைகிறான். சரி, பருத்தி உற்பத்தி குறைவாகிறது, அதனல் பருத்தி விலை அதிகரிக்கிறது என்றால் அப்போது விவசாயி நூல் மில்களுடன் போட்ட ஒப்பந்தந்த்தை மீறி வெளி சந்தையில் விற்கிறார்கள். அப்படியெனில் அந்த புரிதல், ஒப்பந்தம் என்பது அர்த்தமற்றதாகி போவதால் இருவருமே நஷ்டத்தை சந்திக்கிறார்கள். அதற்கு மாறாக இருவரும் ஒழுங்கான புரிதலுடன் தொழில் செய்தால், ஒரு நூற்பாலை தனக்கு தேவையான பருத்தியை முன்கூட்டியே ஒரு விலைக்கு வாங்க தயார் என்றால், விவசாயிகள் அதில் போதுமான லாபம் வைத்து விற்க தயார். எனவே இருவருக்கும் லாபம். அதனால் திருப்பூர் தொழில் திட்டமிட்டபடி அந்த நூல்விலைக்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட்ட ஆர்டர்களை எடுத்து செய்ய முடியும். அதனால் அவர்களுக்கும் லாபம்.
அதாவது தொழில் துறைக்கு தேவையான பஞ்சை மட்டுமே உற்பத்தி செய்வார்கள், தேவையில்லாமல் உற்பத்தி செய்யாததால் அந்த பருத்தியின் விலை வீழவோ அல்லது உற்பத்தி குறைந்து அதிகரிக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏற்படுத்தாது. இது போல ஒவ்வொரு துறைக்கும் நாம் உற்பத்தியை தேவையான அளவில் உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்ல அடுத்த ஆறுமாதத்தில் எனக்கு இவ்வளவு பருத்தி உற்பத்தி ஆகும், அதுபோக தேவை இவ்வளவு இருக்கிறது என்றால் அதற்கேற்ப உற்பத்தியை கூட்டவோ, அல்லது குறைக்கவோ செய்ய முடியும். அதுமட்டுமல்ல, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஸ்பெஷல் குவாலிட்டி பருத்தியை மற்ற நாடுகளின் தேவைக்கு ஏற்ப உடன்பாடு செய்து, உற்பத்தி செய்து ஏற்றுமதியும் முடியும் என்றால் இந்த திட்டமிடல்கள் மூலம் எல்லா விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் நிரந்தரமான லாபத்தை விவசாயிகள் ஈட்ட முடியும்.
அது மட்டுமல்ல, எங்கள் ஊரில் பருத்தி நன்றாக வருகிறது என்றால், தொடர்ந்து பருத்தியை எங்கள் விவசாயிகள் கூட்டாக சேர்ந்து உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம் பெருகிற அனுபவத்தை மேலும் பயன்படுத்தி, அடுத்தடுத்து பயிர் செய்யும்போது செலவினங்களை குறைத்து, லாபத்தை அதிகரிக்க முடியும். அது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை ஒவ்வொரு விவசாயியும் ஒன்றை வாங்கி, அதை மற்தவர்களிடம் பகிர்ந்து வேலையாட்கள் தேவையை குறைத்து செலவை கட்டுப்படுத்தி லாபத்தை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல, அங்கே பருத்தி உற்பத்தி ஒரே இடத்தில் உற்பத்தி செய்வதால், போக்குவரத்து முன்பே திட்டமிடுவதால் செலவு குறையும். எனவே எல்லா வகையிலும் ஒரு பக்கம் விலையை குறைத்து லாபத்தை அதிகரிக்கவும், மறுபக்கம் முன்பே திட்டமிடுவதால் எல்லோருக்கும் லாபம். இப்படி ஒரு ஊரில் பருத்தி என்றால் இன்னொரு ஊரில் வெங்காயம். ஆம் எங்கள் ஊருக்கு அருகில் பெரிய வெங்காயம் என்றால் ஒரு கால்த்தில் கழுவேரிபாளையம். வெங்காயம் பிரசித்தம். அதுபோல மற்ற ஊரில் மிளகாய், மக்காச்சோளம், அரிசி என்று எல்லாமே தேவைக்கு ஏற்ப மட்டும் உற்பத்தி செய்வதால் அரசாங்கமும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு தேவையான கட்டமைப்பை மட்டும் உருவாக்க முடியும். அதனால் தேவை இல்லாத செலவுகளை குறைக்க முடியும்.
🌹 அது தவிர விவசாயத்திற்கு தேவையான இடுபொருளாக சாணம் மிக அவசியம். அதற்கு ஆடு மாடுகள் வளர்ப்பதன் மூலம் அதில் ஒரு வருமானம் ஒரு பக்கம் பார்க்க, இயற்கை விவசாயம் மூலம் பருத்திக்கு தேவையான உரம் போன்ற இடு பொருட்களை வாங்காமல் நாமே தயாரித்து, அதற்கான உற்பத்தி விலையை குறைப்பதன் மூலம் சேமிக்க முடியும். அதற்கு மேலே மண்ணை மலடாக்காமல் தடுக்கமுடியும்.
🌹 அது இல்லாமல் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் கடன் கொடுதது 10K சோலார் பேனல்களை அமைத்துக் கொடுத்து அவர்கள் தேவைக்கு அரசு மின்சாரத்தை சார்ந்திருக்காமல் மின் மோட்டார்கள் பயன்படுத்தலாம் பயன்படுத்தாதபோது அந்த மின்சாரம் அரசுக்கு ரிவர்ஸ் மீட்டர் மூலம் கொள்முதல் செய்வதால், அரசும் அதை அதானி, அம்பானியிடம் மட்டும் வாங்காமல் விவசாயிக்கு முன்னுரிமை கொடுத்து வாங்கலாம். அதன் மூலம் விவசாய்களுக்கு ஆடுமாடு மட்டுமல்ல, உபரி மின்சாரம் மூலம் ஒரு வருமானம் நிலையாக வரும்.
🌹 அது மட்டும்மல்ல மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு கார்பன் கிரிடிட் கொடுப்பதால் அதில் ஒரு தொடர் வருமானம் வரும். அவர்கள் வாய்க்கால் வரப்புகளில் மரங்களை நடுவார்கள், அதன் மூலம் மழை அதிகரிக்கும், விவசாயம் மேலும் செழிக்கும். மேலும் மரங்களாக தேக்கு முதல் சந்தன மரங்கள் வரை ஊடு பயிராக செய்து நீண்ட கால நோக்கில் ஒரு வைப்பு நிதிபோல குழந்தைகளின் எதிர்காலத்திற்கான வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்..அருமையாக இருக்கிறதே ஏன் நடப்பதில்லை? எதனால் செய்ய முடிவதில்லை? விவசாய மக்களுக்கும், கொள்முதல் செய்பவர்களுக்கும் இடையில் ஒரு சரியான புரிதல், நம்பிக்கை இல்லை. அவர்களுக்குள் இருக்கும் அந்த இடைவெளியை இடைத்தரகர்கள் பெரியளவில் பயன்படுத்தி அவர்களுக்குள் அந்த புரிதல் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். அதனால் வரும் அளவு கடந்த லாபத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்து இதுபோன்ற சட்டங்கள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
அப்படியெனில் அதை தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் நேரடியான நல்ல புரிதலும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். அதை அவ்வளவு எளிதாக செய்ய இந்த இடைத்தரகர்களும், அதன் மூலம் ஆதாயம் பார்க்கும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காது. அதை சரி செய்ய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் இடையே அந்த நம்பிக்கையை ஏற்படுத்த சரியான ஒப்பந்த விவசாய சட்டங்களை இயற்றி அதை நெறிமுறை படுத்த வேண்டும்.
இதை மோடி அரசு ஏன் செய்யவில்லை? சென்ற முறை புதிய விவசாய கொள்கைகளில் அரசு கொண்டுவந்தது அதில் இதுவும்தானே இருக்கிறது. அதை விவசாயிகளான நாம்தானே எதிர்த்தோம். அப்போது நம்மை எதிர்க்க தவறானவர்கள் யார், சரியானவர்கள் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க நல்ல நோக்கம் கொண்டவர்கள், கட்சி தொண்டர்கள் வேண்டும். இதை விவசாயிகளுக்காக வருத்தப்படும், வாழ வழி தேடி வெளியே வந்த நம்மைப்போல விவசாய குடும்ப நண்பர்கள், உங்களால் ஒரு பத்து விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கு புரியவைத்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களால் கமெண்ட் செய்ய முடியுமா? அதற்கு முன்பு இதில் சந்தேகம் அல்லது மாற்றம் இருந்தால் கேளுங்கள் அதை முதலில் சரி செய்து கொள்வோம். தேவைப்பட்டால் விவசாயிகளுக்காக ஒரு புதிய பொதுவான குரூப்பை உருவாக்கி அதில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை, அதில் இருக்கும் தடைகளை விவாதித்து தீர்வு காண்போம். சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.. என்று விவசாயம் தழைக்க .. நீரின்றி அமையாது உலகு..!