சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அழைப்பு!
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசியல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபிய அமைச்சகத்தில் மருத்துவர்களாக பணிபுரிய பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில்,” சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல் ஹைதராபாத் (HYDERABAD) -இல் நடைபெறவுள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளமான www.omcmanpower.tn.gov.in -ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது .