For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பட்ஜெட் 2024 : முன்னுரிமை அம்சங்கள் & ஆந்திரா,பீகாருக்கு சிறப்பு திட்டங்கள்!

01:09 PM Jul 23, 2024 IST | admin
பட்ஜெட் 2024   முன்னுரிமை அம்சங்கள்   ஆந்திரா பீகாருக்கு சிறப்பு திட்டங்கள்
Advertisement

பிரதமர் மோடியின் 3வது முறை ஆட்சி அமர்ந்த பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் இது ஆகும். இதன்மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்யின் சாதனை முறியடிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னதாக அவர் நிதி அமைச்சகம் சென்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜனாதிபதி நிர்மலாவுக்கு இனிப்பு ஊட்டினார்.

Advertisement

பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா பேசியதாவது: இந்தியாவில் வரலாற்று சாதனையாக 3வது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பணவீக்கம் மிக குறைந்த நிலையிலே தான் உள்ளது.இந்தியா பொருளாதாரம் இன்னும் முன்னேறும் நிலையில் உள்ளது. பண வீக்கம் 4 % மாக குறையும். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, இளைஞர்கள் திறன் முன்னேற்றம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி இளைஞர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அமைச்சர் நிர்மலா கூறினார்.

Advertisement

முன்னதாக மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் ஒப்புதல் பெற்றார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான படஜெட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என கூறி இருந்தார்.

அதில் வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்த உள்ள 9 அம்சங்களை பற்றியும் இந்த இடைக்கால பட்ஜெட் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் கூறி இருந்தார்.

வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் 9 அம்சங்கள்:

1. விவசாய உற்பத்தித்திறன்
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு
3. மனித வள மேலாண்மை மற்றும் சமூக நீதியை
4. உற்பத்தி & சேவைகள்
5. நகர்ப்புற வளர்ச்சி
6. ஆற்றல் பாதுகாப்பு
7. உட்கட்டமைப்பு
8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி
9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து 41ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முக்கியமான அறிவிப்பாக ஆந்திராவின் தலைநகராக உருவாகும் அமராவதி க்கு மேம்பாட்டு நிதியாக 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க 26,000 கோடி பட்ஜெட்டில் நிதியுதவி வழங்கப்படும்.

பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர், மின்சாரம், ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும், ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பீகாரில் நாளாந்த பல்கலைக்கழகம் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.

இதை அடுத்து பாஜகவுக்கு அதரவு கொடுத்த இரு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியதைக் கண்டித்து எதிர் கட்சியினர் கோஷம் எழுப்பினர்

Tags :
Advertisement