For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பி.எஸ்.என்.எல்.லின் புதிய லோகோ வெளியீடு!

08:28 PM Oct 22, 2024 IST | admin
பி எஸ் என் எல் லின் புதிய லோகோ வெளியீடு
Advertisement

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், (பிஎஸ்என்எல் , (BSNL) ) இந்தியாவின் அரசுடமையான ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமாகும். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல், இந்தியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய தொடர்பு சேவை நிறுவனமாகும். இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.இந்தியப் பொருளாதாரத்தின் பொதுவுடமைக் கால கட்டத்தில் பிஎஸ்என்எல் ஏறத்தாழ ஏகபோகத் தனி உரிமையாளராகத் திகழ்ந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில், நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்கியது.குறிப்பாக பாரதப் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் சாம் பிட்ரோ மேற்பார்வையில் நாடு முழுவதும் உட்கட்டமைப்பினை உருவாக்கினார்கள். நாட்டின் கடைக்கோடி கிராமமானாலும் டெலிபோன் சேவை இருந்தது. எங்கெங்கு காணினும் டெலிபோன் பூத்துகள். எப்போதும் இந்தியாவின் எந்த மூலைக்கும் தொடர்பு கொண்டு பேசலாம். இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கோப்பான நிறுவனம், பாஜக அரசின் சூழ்ச்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆணவத்தால் மக்களுக்கான சேவையில் வேதனையை சம்பாதித்து வீழ்ச்சி அடைந்து விட்டது. இன்று 10–20 சதவிகித ஊழியர்களே நிரந்தரமாக பணி புரிகிறார்கள். மற்றவர்கள் தற்காலிக ஊழியர்கள். பல ஊர்களில் நகரின் மத்தியில் இருக்கும் இதன் அலுவலகம், தற்சமயம் மிக குறைந்த நபர்களால் செயல்படுகிறது. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்ற கருத்து அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லோகோவுடன் ஏழு புது சேவைகள் பி.எஸ்.என்.எல்.-இல் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" நீக்கப்பட்டு "கனெக்டிங் பாரத்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு ஸ்பேம்-இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பி.எஸ்.என்.எல். ஹாட்ஸ்பாட் மூலம் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.

Advertisement

இத்துடன் ஃபைபர் சார்ந்த இன்ட்ராநெட் டிவி சேவை வழங்கப்படுகிறது. இதில் 500 நேரலை டிவி சேனல்கள், FTTH பயனர்களுக்கு பே டிவி ஆப்ஷன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. மேலும் டிவி ஸ்டிரீமிங் FTTH டேட்டாவில் கழிக்கப்படாது.

இதுதவிர சிம் கியோஸ்குகளையும் பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் சிம் வாங்குவது, போர்ட் செய்வது தொடர்பான சேவைகளை பயன்படுத்த முடியும்.

இதுதவிர சி-டி.ஏ.சி. மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன. இதனை மைனிங்கிற்காக பயன்படுத்தலாம்.

இந்த நெட்வொர்க் மேம்பட்ட ஏ.ஐ., ஐ.ஓ.டி. செயலிகளை சப்போர்ட் செய்யும். இறுதியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டி2டி கனெக்டிவிட்டி சொல்யூஷன் வழங்கப்படுகிறது. இது செயற்கைக்கோள் மற்றும் டெரஸ்ட்ரியல் மொபைல் நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்கிறது.

Advertisement