For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரதர் - விமர்சனம்!

10:12 PM Nov 01, 2024 IST | admin
பிரதர்   விமர்சனம்
Advertisement

கோலிவுட்டில் குடும்பத்தின் , குடும்ப உறுப்பினர்களின் பாச மகத்துவத்தை போற்றும் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்படியான பேமிலி & செண்டிமெண்ட் படங்கள் தற்போதைய காலக்கட்டங்களில் அவ்வளவாக இல்லை என்றாலும், அவ்வப்போது  ஓரிரு திரைப்படங்கள் வெளியாகி மக்களின் மனதை கவர்கிறது. அந்த பாணியில் தயாராகி கவர வந்திருப்பதுதான் ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஓகே ஓகே’ ஆகிய நகைச்சுவை-காதல்-குடும்பப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் டைரக்ஷனில், ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா, நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘பிரதர்’ திரைப்படம்.

Advertisement

நாயகன் கார்த்தி என்ற நாமகரணத்தில் வரும் ஜெயம்ரவி சின்ன வயதில் இருந்தே பாயிண்ட் பிடித்து லா பேசுவதில் எக்ஸ்பர்ட் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி (கார்த்திக்). ஆனால், போகிற இடத்தில் எல்லாம் பாயிண்ட் பிடித்துப் பேசி வம்பிழுத்து வரும் பொறுப்பில்லாத கேரக்டர் கொண்டவராக இருக்கிறார் ஜெயம் ரவி. அது அவர் திறமை என்று நம்பி லா காலேஜூல் சேர்கிறார்.அங்கு சட்டக்கல்லூரி மாணவருக்கு கல்லூரி பேராசிரியரே தேர்வு எழுத அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மீடியாவுக்கு அனுப்புவேன் என்று சொல்ல,வேண்டாம் இது பெரிய இடத்து விவகாரம் என்று பேராசிரியர் சொல்ல, இறுதியில் தேர்வும் எழுதாமலும், படிப்பை முடிக்காமலும் வெளியில் வருகிறார். ஒரு சூழலில் இவருடைய இந்த விதண்டாவாதப் போக்கு ஜெயம் ரவி அப்பாவிற்கே பிரச்சினையாக மாற ஜெயம் ரவியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். அப்போது ஜெயம் ரவியின் அக்கா பூமிகா (ஆனந்தி) அவரை திருத்தி நல்ல பையனாக மாற்றுவேன் என சொல்லி தன்னுடன் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு டைம்டேபிள் போட்டு வாழும் அக்கா ஆனந்தியின் குடும்பத்தினரைப் பார்த்து குழம்பி போய் விடுகிறார் . ஒரு கட்டத்தில் வந்த சண்டையால் அக்கா பூமிகா, தனது தம்பி கார்த்திக், மகன் அர்ஜூன் (மாஸ்டர் அஸ்வின்), மகள் அபி (விஆர் ரிதி) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அதை அடுத்து அந்த குடும்பத்தினர் எடுக்கும் முடிவு என்ன, ஜெயம் ரவி நிலைமை என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸில் பதில் சொல்வதே பிரதர் படக் கதை.

Advertisement

முன்னரே நடித்து இன்றைக்கும் நினைவில் நிற்கும் சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற குடும்ப படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு அந்தப் பட்டியலில் இணையும் ஒரு படமாக பிரதர் அமைந்து விட்டது.வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று தந்தை கேட்கும் போது அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு நான் விளையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் ஜெயம் ரவி முதல் காட்சியிலேயே அவரது கேரக்டர் என்ன என்பதை எக்போஸ் செய்து விடுகிறார். அக்கா வாங்கி கொடுக்கும் ஜாப், பிரியங்கா மோகன் வாங்கி கொடுக்கும் ஒர்க், அக்காவின் மாமனார் வாங்கி கொடுக்கும் வேலை என கிடைத்த இடங்களில் எல்லாம் நியாய தர்மம் பேசி வேலை வாங்கி கொடுத்தவர்களுக்கு வேட்டு வைக்கும் காட்சிகளில் ஜெயம் ரவி கடுப்பேற்றும் நடிப்பில் மிரள விடுகிறார். முத்தாய்ப்பாக அக்கா பூமிகாவையும் அவரது கணவரிடம் சண்டை போட வைத்து அவரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து ஒரு கட்டத்தில் தான் செய்த தவறுகளை உணரும்போது தான்தோன்றித்தனமாக திரியும் இன்றைய பல இளைஞர்களை அவர்கள் செய்யும் தவறுகளை உணர வைப்பதில் ஸ்கோர் செய்து விடுகிறார் ஜெயம் ரவி..!

அவருக்கு சப்போர்ட் கொடுக்கும் ரோலில் நாயகியாக பிரியங்கா மோகன் டேன்ஸில் பலே சொல்ல வைக்கிறார்.பாசமுள்ள பொறுப்பும் , புன்னகையும் கொண்ட அக்காவாக பல இடங்களில் ரசிகர்களையும் கவர்வதில் ஜெயித்து விடுகிறார் பூமிகா.இவர்களைத் தவிர சிலபல முக்கிய பாத்திரங்களாக வரும் நட்டி, சரண்யா பொன்வண்ணன், சீதா என பல  முகங்கள் பர்பெக்ட். குறிப்பிட்டு சொல்வதானால் அப்பாவி அம்மாவாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சரண்யா இந்த படத்தில் ஆங்கிலம் பேசு நாகரிக அம்மாவாக நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். என்னாச்சு பேமிலி சப்ஜெக்ட் என்பதால் வில்லனே கிடையாதோ என்று நினைக்கும் போதே வில்லன் அவதாரம் எடுக்கிறார் ராவ் ரமேஷ். பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின் இருவரும் பள்ளி கலை நிகழ்ச்சியில் தன் தாய் தந்தை பிரிந்த கதையை சொல்லும் போது டச்சிங்.ஜெயம் ரவி மற்றும் விடிவி கணேஷ் காம்பினேஷன் பக்காவா இருக்கு. காமெடிக்கு பஞ்சமில்லை.டாக்டராக ஒரு சீசனுக்கு வந்த எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். விடிவி கணேஷை வைத்து கூட்டும் அலப்பறைகள் நாட் பேட்.

ஹரிஷ் ஜெயராஜ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுவதும் மக்காமிஷி பாடல் டிராவல் செய்கிறது .விவேகானந்தனுடைய ஒளிப்பதிவில் ஊட்டி கண்களுக்கு குளிர்ச்சி.

பழிக்குப் பழி, அடி,தடி, வன்முறைத்தனமாய் போய் கொண்டிருக்கும் கோலிவுட்டில் டெக்னிக் டீடெய்ல் எல்லாம் இல்லாமல் ஒரு மிடில் கிளாஸ் பேமிலிக்கும், ஹையர் பொஸிசல் இருந்து அந்த கௌரவத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து ஒரு பக்கா பேமிலி படமாக உருவாகி இருக்கிறது பிரதர். ஆனாலும் இயக்குநர் தன்னுடைய பெரும் பலமான காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட்டை இந்த காலத்திற்கு ஏற்றபடி திரையில் கொண்டு வர இன்னும் கொஞ்ச்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம்

மொத்தத்தில் பிரதர் - லவ்லி பாய்

மார்க் 3.5/5

Tags :
Advertisement