தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அரசு சேவைகளைப் பெற லஞ்சம்:12 மாதங்களில் 66% அதிகரிப்பு!

09:00 AM Dec 10, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டிலுள்ள சகல அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் - ஊழல் தலைவரித்தாடுகிறது. அரசின் திட்டங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன. மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயம் ஏற்படுகிறது. கடந்த, ஓராண்டில் மட்டும், 21,660 லஞ்சப் புகார்கள் அளிக்கப்பட்டதில், இரு எப்.ஐ.ஆர்., மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த புரையோடிப்போன லஞ்சமும், ஊழலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்துள்ளன; தேச வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடைக்கல்லாகி இருக்கின்றன. முன்பு, கடமைகளை மீறுவதற்காக லஞ்சம் கொடுப்பர்;தற்போதோ, கடமையைச் செய்வதற்கே லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. அடிமட்டத்தில் இருந்து இக்கொடுமையைத் துடைத்தெறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில் 'லோக்கல் சர்க்கிள்' எனப்படும் சமூக வலைதள அமைப்பு, அரசு பணிகள் பெறுவதற்காக தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, 159 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.

Advertisement

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை தகவல்கள் இதோ:

Advertisement

66 சதவீத வணிக நிறு​வனங்கள் அரசு சேவை​களைப் பெற லஞ்சம் கொடுத்​துள்ள தகவல் கிடைத்​துள்ளது. அரசுக்கு பொருட்களை விநி​யோகம் செய்ய, ஒப்பந்​தங்கள் மேற்​கொள்ள, ஒப்பந்​தங்​களுக்கு தகுதி பெற, நிறைவேற்றிய பணிகளுக்கு பணம் பெற என பல விஷயங்​களுக்காக அவர்கள் லஞ்சம் கொடுத்​துள்ளனர்.

18 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்​துள்ளதாக தெரி​வித்​துள்ளனர். இந்த செய்தி​யைப் பார்த்து பொது​மக்கள் யாரும் அதிர்ச்சி அடைய மாட்​டார்​கள். ஏனென்​றால், அரசின் சேவை​களைப் பெற பல நேரங்​களில் ஒவ்வொரு​வரும் லஞ்சம் கொடுத்த அனுபவம் அவர்​களது நினை​வுக்கு வரும். அதேநேரம், 16 சதவீதம் பேர் லஞ்சம் எதுவும் கொடுக்​காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக தெரி​வித்​துள்ளனர். இந்த செய்தி பொது​மக்களை நிச்​சயம் அதிர்ச்​சி​யடையச் செய்​யும் என்ப​தில் சந்தேகமில்லை. லஞ்சம் கொடுக்​காமல் அரசு சேவைகளை பெற்​றவர்களை ஆராய்ந்​தால் அவர்கள் தங்களுக்கு இருக்​கும் ஏதாவது ஒரு செல்​வாக்கைப் பயன்​படுத்தி இருப்​பார்​கள். இந்த வாய்ப்பு அனைத்து பொது​மக்​களுக்​கும் கிடைக்​காது.

லஞ்சம் அதிகம் புழங்​கும் துறை​களாக பொதுப்​பணித்​துறை, போக்கு​வரத்து, மின்​சா​ரம், சுகா​தா​ரம், பதிவுத்​துறை, வணிகவரி, கனிமவளம், மாநக​ராட்சி ஆகியவை குறிப்​பிடப்​படு​கின்றன. லஞ்சத்தை ஒழிப்பது குறித்து நீண்​ட​காலமாக பேசப்​பட்டு வருகிறது. ஆனால், எந்த துறை​யிலும் லஞ்சம் குறைந்​த​பாடில்லை. பொதுவாக பொது​மக்கள் நேரடியாக தொடர்​பு ​கொள்​ ளும் துறை​களில்​தான் அதிக லஞ்சம் புழங்​கு​கிறது என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. அதனால், பொது​மக்​களை​யும், அரசு அதிகாரி​களை​யும் சந்திக்க விடா​மல், இணைய வழியாக சேவை​களுக்கு விண்​ணப்​பித்து சான்​றிதழ்​கள், உரிமம், உத்தர​வுகள் உள்ளிட்​ட​வற்றை பெற்றுக் கொள்ள முடி​யும் என்ற வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி உள்ளன. அதற்காக இ-சேவை மையங்கள் உருவாக்​கப்​பட்டு அரசு சேவை​களுக்கு விண்​ணப்​பிக்க வலியுறுத்​தப்​படு​கின்​றனர். ஆனால், பெரும்​பான்​மையான பணிகளுக்கு இ-சேவை மையங்கள் விண்​ணப்​பங்களை பூர்த்தி செய்​யும் இடங்​களாக மட்டுமே செயல்​படு​கின்றன.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்களை நகல் எடுத்​துக் கொண்டு மீண்​டும் சம்பந்​தப்​பட்ட துறை அதிகாரிகளை சந்திக்​கும்படி பொது​மக்கள் கட்டாயப்​ படுத்​தப்​படு​கின்​றனர். அரசு அதிகாரிகளை சந்திக்​காமல் சேவையைப் பெற முடி​யாது என்ற நிலை​மைக்கு பொது​மக்கள் தள்ளப்​படு​கின்​றனர். இந்த நடைமுறை, இ-சேவை மையங்கள் கொண்டு வரப்​பட்​டதன் நோக்​கத்​தையே சிதைக்​கும் வகையில் உள்ளது. தொழில்​நுட்ப வசதிகளை இன்னும் மேம்​படுத்தி அரசு அதிகாரிகளை பொது​மக்கள் சந்திக்க வேண்டிய தேவையே இல்லாத நிலையை உருவாக்க வேண்​டும். ஒரு சேவையைப் பெற இ-சேவை மையத்​தில் விண்​ணப்​பித்​தால், அதன் முன்னேற்​றம், தற்போதைய நிலை, குறைகள் உள்ளிட்ட விவரங்கள் விண்​ணப்​பித்​தவர்​களுக்கு உடனுக்​குடன் வழங்​கப்பட வேண்​டும். குறைகள் இருந்​தால், குறுஞ்​செய்திகள் வாயிலாக தகவல் தெரி​வித்து சரிசெய்​யப்பட வேண்​டும். எக்காரணத்​தைக் கொண்​டும் விண்​ணப்​பித்த விவரங்களை எடுத்​துக் கொண்டு சென்று அதிகாரிகளை சந்​திக்​கும் நிலையை உரு​வாக்​கக் கூடாது. அந்த தொடர்பை துண்​டித்​தால் நிச்​ச​யம் லஞ்​சம் ஒழி​யும்.

Tags :
66% increaseBriberygovernment serviceslocal circlcஅரசு சேவைலஞ்சம்
Advertisement
Next Article