தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கனடா பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு... வெளிநாட்டுக்கு பறந்தது திமுக திட்டமா?அதிமுக திட்டமா?

08:59 PM Apr 02, 2024 IST | admin
Advertisement

காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். ஆனாலும், நமது பிஸியான வாழ்க்கை முறையால் சில சமயங்களில் அதைத் தவிர்க்க வேண்டிய நிலை வருகிறது. உணவியல் நிபுணர்கள் பலரும் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” மு.க.ஸ்டாலின் மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். அதிமுக கொண்டுவந்த திட்டத்தினை திமுக வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டமாக செயல்படுத்துவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

ஆம்.. இது உண்மைதான்..  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2019ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதியன்று தொடக்கி வைத்தார்.

Advertisement

பின்னர் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து மதுரையில் அண்ணாவின் பிறந்த நாளில், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த திட்டம் தெலங்கானா மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது எக்ஸ் தளத்தில், 'கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை திமுக வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படுவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்' என்று கூறப்பட்டுள்ளது கேலி செய்தியாகியுள்ளது.

Tags :
ADMKBreakfast SchemeCANADAdmkஅதிமுககனடாகாலை உணவுதிமுகபள்ளி மாணவர்கள்
Advertisement
Next Article