For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வீரமிக்க சிம்பொனி: லண்டனில் அரங்கேற்றி அசர வைத்தார் நம்ம இளையராஜா!

09:24 AM Mar 09, 2025 IST | admin
வீரமிக்க சிம்பொனி  லண்டனில் அரங்கேற்றி அசர வைத்தார் நம்ம இளையராஜா
Advertisement

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி இந்த சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். ‘மடை திறந்து பாடும் நதியலை நான்…’ ‘ஓ பிரியா பிரியா..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் இடம்பெற்றிருப்பவை சிம்பொனி இசைதான் என்று இளையராஜாவே ஒரு முறை கூறியுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சிம்பொனி நம்பர் ஒன்’ என்கிற பெயரில் இளையராஜா ஒரு ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பதியப்பட்டது. இப்போது, லண்டன் அப்பல்லோ அரங்கத்தில் பீத்தோவான், மொசார்ட் மாதிரி உலக மகா இசை மேதைகள் ஒரே நேரத்துல கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் கருவிகளையும் தன்னோட கை அசைவில் வாசிக்க வைத்து இருக்கிறார் இளையராஜா. ஆக தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்து அசத்தி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பேசப்பட வேண்டிய வரலாறு உண்டு.

Advertisement

1993இல் இளைய​ராஜா தனது முதல் சிம்​பொனியை அமைக்​கப்​போகிறார் என்கிற செய்தி, இந்தியா முழு​வதும் அனைத்து இதழ்​களி​லும் பரபரப்புச் செய்தியாக மாறியது. தமிழ்​நாட்​டின் அனைத்து ஊடகங்​களும் அது குறித்து விரிவாக எழுதின. நாடாளு​மன்​றத்​தில் இளைய​ராஜா​வின் சிம்​பொனி குறித்து கவன ஈர்ப்புத் தீர்​மானம் ஒன்றைக் கொண்டு​வந்து, பாராட்டுத் தீர்​மானத்தை நிறைவேற்ற வேண்​டும் என்ற கோரிக்கையை வைகோ முன்​வைத்​தார்.

Advertisement

சென்னை மாநகர் முழு​வதும் பல அமைப்புகள் சுவரொட்​டிகளை ஒட்டித் தமது மகிழ்ச்சியை வெளிப்​படுத்​தின. திரைத் துறை​யினர் கொண்​டாடி மகிழ்ந்​தார்​கள். ‘அடை​யாறு மாணவர் நகலகம்’ உரிமை​யாளர் அருணாசலம் பெரி​யார் திடலில் இசைஞானிக்​குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்​தார்.சாரட் வண்டி​யில் அமர வைக்​கப்​பட்டு, ஊர்வலமாக அழைத்​துச் செல்​லப்​பட்ட இசைஞானி, பத்திரி​கை​யாளர்​களிடம் பேசி​ய​போது ‘இந்தச் சாதனையைத் தமிழர்​களோடு பகிர்ந்து​கொள்​ளாமல் வேறு யாரிடம் பகிர்ந்து​கொள்​வது’ என்று கூறியது அனைவரை​யும் கவர்ந்​தது.

ஆனால், பதிவுசெய்​யப்​பட்ட இசைக் கோவை வெளி​யீடு கெடு​வாய்ப்​பாகத் தள்ளிப்​போனது ஏன் என்கிற கேள்வி விவா​திக்​கப்​பட்டு, மெல்ல மெல்ல மங்கிப்​போனது. அது குறித்​துக் கேள்வி கேட்​கப்​படும்​போது, விரை​வில் வெளிவரும் என்கிற பதிலோடு கடந்து​விடு​வார் இளைய​ராஜா. பெரும் இடைவெளிக்​குப் பிறகு இன்று உலக அரங்கில் நிரூபித்து விட்டார்

ஜஸ்ட் லைக்'இம்புட்டுதா சிம்பொனி...' என்று இந்த இசைக் கோர்வையை எளிதாகச் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. சிம்பொனி இசை லவ்வர்ஸூகளுக் கான பெரும் விருந்து. அதைக் கேட்டுத்தான் உணர முடியும். எழுபதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் இசைக் கருவிகளில் ஆழ்ந்த அமைதியுடன் அடர்ந்திருக்கும் சப்தங்கள் ஒவ்வொன்றாக விடுதலைப் பெற்று, இசைக்கோர்வையில் இணையும். அடர்வான அந்த இசை மெல்ல மெல்லமாக காற்றில் கலந்து வியாபித்து நம்மை ஆட்கொண்டு தன்வசப்படுத்திவிடும்.ஒவ்வொரு இசையும் உயிரின் ஒவ்வொரு செல்லாகப் பயணித்து உணர்வின் நரம்புக்குள் அலைபாயும். அதற்குமேல் அதன் வசம் நம்மை ஒப்படைத்துவிட வேண்டியதுதான்.

இசையமைப்பாளரின் இசைக் குறிப்புக்கும், இசைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பவரின் கை அசைவிற்கும் கட்டுண்டு மெல்ல ஆரம்பித்து, வியாபித்து, ஓங்காரம் எடுத்து அடங்கும். நீண்ட நேரம், பல இசை அடுக்குகளுடன், எழுபதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களால் இசைக்கப்படும், பல இசைக்கருவிகளின் பெரும் இசைக்கோர்வை. காற்று, தோல், நரம்பு வாத்தியங்களின் இசைத் தொகுப்பு என்றுகூட சொல்லலாம். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளின் இசையை உள்வாங்கி, கட்டுக்கோப்புடன் பிரதிபலிக்கும் கச்சிதமான உயரம், அகலத்துடன் அமைக்கப்பட்ட அரங்கிலேயே சிம்பொனி அரங்கேற்றும், ஒலிப்பதிவு செய்யப்படும். அதன் அரங்கேற்றமே கேட்பது மட்டுமின்றி, கண்பதற்கே அலாதியான அனுபவம்தான்.

எளிமையாக சொல்ல வேண்டும் எனில்,சிம்பொனிஎன்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்.மத்தியக் காலத்​தில் தோன்றிய சிம்​பொனி எனும் செவ்​வியல் மரபு இசைக் கோவையை இதுவரை 2,822 பேர் எழுதி​யிருக்​கிறார்கள் என்று ஒரு புள்​ளி​விவரம் சொல்​கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா​வில் இரண்டு பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்​கப்பட்டிருக்கின்றன. ஒருவர் இளைய​ராஜா (1993), மற்றொருவர் சிதார் மேதை ரவிசங்கர் (2010). இந்த இரண்டு பேரின் சிம்​பொனிக்​கும் ஒரு தனித்​தன்மை உண்டு. இருவருமே இந்திய இசை மரபை அதில் கலந்து, தமது சிம்​பொனிகளைப் படைத்​திருந்​தனர். அதாவது, தூய சிம்​பொனி (pure symphony) இல்லை.

ஆசியா​வைச் சேர்ந்​தவர்கள் உருவாக்கிய சிம்​பொனி​யில் அவர்​களது நாட்​டின் செவ்​விசைத் தாக்கம் இருக்​கிறது என்பதை மறுக்க முடி​யாது. ரவிசங்கர் தமது சிம்​பொனி​யில் சிதா​ரை​யும் தபேலா​வை​யும் சேர்த்​தார். தூய சிம்பொனியாகக் கருதப்படாததால் தமது முதல் சிம்​பொனியை இளைய​ராஜா வெளி​யிட​வில்லை என்றும் சொல்​லப்​படு​கிறது.

இந்த விமர்​சனம் வரக் கூடாது என்கிற கவனத்​துடன் தனது ‘வேலியன்ட்’ (Valiant) சிம்​பொனியைத் தூய சிம்​பொனி என்று அழைக்கிறார் இளைய​ராஜா. அந்த வகையில், தூய சிம்​பொனியை அமைத்த முதல் இந்தியர் என்கிற வரலாற்றினை அவர் படைக்​கிறார். இதை உரிய முறை​யில் கொண்டாட வேண்​டியது அறிவும் அறமும் நிறைந்த சமூகத்​தின் கடமை.மேதைகளை அவர்கள் வாழும் காலத்​திலேயே கொண்​டாடும் தகு​தியை வளர்த்​துக்​கொள்ளாத சமூகமாக இருப்​ப​திலிருந்து ​விடு​படு​வதற்கு இது ஒரு ​வாய்ப்பு. வீரம் மிக்​கவர் என்ற பொருள் தரும் Valiant சிம்​பொனியை வழங்கும் இளை​ய​ராஜாவுக்கு என நகரை உருவாக்கி கெளரவப்படுத்தக் கூட தமிழக அரசு முன்னெடுப்பு செய்யலாம் .

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement