தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குத்துச் சண்டைப் போட்டி: யூ ட்யூப்பரிடம் தோல்வியைத் தழுவிய மைக் டைசன்!

04:51 AM Nov 17, 2024 IST | admin
Advertisement

புகழ்பெற்ற அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுக்கு வயது 58. அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 1985 ம் ஆண்டு முதல் 2004 வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று எதிர்த்து விளையாடும் வீரர்களை வீழ்த்தி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.50 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற சாதனை சரித்திரத்துக்கு சொந்தக்காரர் டைசன். அத்துடன் அதில் 44 நாக் அவுட்கள் செய்தவர்.குத்துச்சண்டையில் எவ்வளவு பிரபலமோ அதேபோல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வந்தவர் தான் மைக் டைசன். தனது பயிற்சியாளரை பிரிந்த பிறகு அவர் விதிகளை மீறியது, பாலியல் புகார் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார். இறுதியில் 2004ல் அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தான் 19 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் மைக் டைசன் குத்துச்சண்டையில் பங்கேற்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 58 வயது நிரம்பிய மைக் டைசன் இளம் வீரரான ஜேக் பால் என்பவரை எதிர்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த வயதில் 27 வயதான ஜேக் பால் என்பவருடன் குத்துச்சண்டைக் களத்துக்குள் குதித்துவிட்டார். இவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு யூடியூபராக அறியப்பட்டார். ஜேக் பால் தனது தொழில்முறை குத்துச்சண்டையை 2018ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்று 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.மைக் டைசன் மற்றும் ஜேக் பால் இருவருக்கும் இடையான குத்துச் சண்டை போட்டிக்கு முந்தைய நாளில் இருவருக்கும் எடை சோதனை செய்யப்பட்டது. அப்போது நடந்த உரையாடலின்போது மைக் டைசன் ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார். இது அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதன் பின்பு அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் பிரித்து வைத்தனர். இச்சம்பவம் இருவருக்கும் இடையேயான போட்டியின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

Advertisement

அமெரிக்காவில் உள்ள டெக்சாசில் நடந்த இப்போட்டி எட்டு சுற்றுகளைக் கொண்டது. போட்டியில் 70 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்வையிட வந்தனர். மேலும் நெட் ஃபிளிக்ஸ் நேரலையில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர். ஒவ்வொரு சுற்றும் இரண்டு நிமிடம். எட்டு சுற்றுகள் கொண்ட விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் டைசன் தோல்வியைத் தழுவினார்.

வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய்), தோல்வி அடைந்த மைக் டைசனுக்கு 20 மில்லியன் டாலர்களும் கிடைக்கும். போட்டியில் வென்ற ஜேக் பால் டைசனைக் கட்டித் தழுவி உணர்ச்சி வயப்பட்டார்.மேலும் போட்டிக்குப் பின்னர் பேசிய மைக் டைசன் இதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்பதை கூறமுடியாது என தெரிவித்தது குத்துச் சண்டை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Boxing matchdefeatsJake PaulMike TysonYoutuber
Advertisement
Next Article