For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாரத் - இந்தியா ஆகிய இரண்டு பெயர்களும் பயன்படுத்தபடுமாம்!

09:11 AM Jun 18, 2024 IST | admin
பாரத்   இந்தியா ஆகிய இரண்டு பெயர்களும் பயன்படுத்தபடுமாம்
Advertisement

மூக அறிவியல் பாடத்திட்டத்துக்கான உயர்மட்ட குழு, அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்தியா என்றிருக்கும் இடங்களில் எல்லாம் பாரத் என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது. இதனை அடுத்து கல்வியாண்டின் தொடக்கமாக பள்ளிகள் திறக்கப்பட்டது முதலே இந்த கருத்துக்கள் இணைய விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றன. இதை அடுத்து தங்கள் மேற்பார்வையில் தயராகும் பாடபுத்தங்களில் பாரத் - இந்தியா ஆகிய இரண்டு பெயர்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது .என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்.

Advertisement

அதாவது பள்ளி படிப்புக்கான பாடப்புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைத்து வருகிறது. சமூக அறிவியல் பாடத்துக்கான புத்தகங்களில், இந்தியா என்பதற்கு பதிலாக, பாரத் என்பதை குறிப்பிட வேண்டும் என, நிபுணர் குழு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது பெரும் சர்ச்சையானது..!

Advertisement

பழங்காலத்திலிருந்தே, இந்திய நிலம் ஜம்புத்வீபம், பாரத்காண்ட், ஹிம்வர்ஷ், அஜ்னாபவர்ஷ், பாரத்வர்ஷ், ஆர்யவர்தா, ஹிந்த், ஹிந்துஸ்தான் மற்றும் இந்தியா என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் இவற்றில் ‘பாரதம்’ என்ற பெயர் மிகப் பிரபலமாகவும் பரவலாகவும் இருந்து வருகிறது. நம் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைப் போலவே, அதன் பெயரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறாக மாறிவந்துள்ளது.சில சமயங்களில் இந்தப் பெயர்களில் புவியியல் வெளிப்படுகிறது, சில சமயங்களில் சாதி உணர்வு, சில நேரங்களில் கலாச்சாரம்.

ஹிந்த், ஹிந்துஸ்தான், இந்தியா போன்ற பெயர்களில் புவியியல் வெளிப்படுகிறது. இந்தப் பெயர்களின் மூலத்தில் சிந்து நதி முக்கியமாகக் காணப்படுகிறது, ஆனால் சிந்து ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் நதி மட்டுமல்ல. சிந்து என்பது ஒரு நதியின் பெயர், இது கடலைக் குறிக்கும் சொல்லும் ஆகும். நாட்டின் வடமேற்கு பகுதி ஒரு காலத்தில் சப்தசிந்து அல்லது பஞ்சாப் என்று அழைக்கப்பட்டது. எனவே இது ஏழு அல்லது ஐந்து முக்கிய நீரோடைகளுடன் கூடிய ஒரு பெரிய வளமான பகுதியைக் குறிக்கிறது.

இதேபோல், பாரதம் என்ற பெயருக்குப் பின்னால், சப்தசாந்தவப் பகுதியில் செழித்தோங்கிய அக்னிஹோத்திரக் கலாச்சாரத்தின் (அக்கினியில் வேள்வி வளர்ப்பது) அடையாளம் உள்ளது.இந்த தேசத்தை நாம் பா-ரா-தா என்று அழைத்தோம் , கடந்த காலத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவர் பரதன். அவர் பெயரால் நாடு பெயரிடப்பட்டது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில், அவர் நாட்டின் பெயரால் அழைக்கப்பட்டார். இந்த நாட்டில் எத்தனையோ பாரதர்களும், பாரதிகளும் உள்ளனர் - அவர்கள் இந்த தேசத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். பரத மன்னனுக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர், ஆனால் பேரரசை ஒப்படைக்கும் நேரம் வந்ததும், பரத்வாஜ் முனிவரின் மகனான பூமன்யுவிடம் அதைக் கொடுத்தார். இந்த சிறுவன் காட்டில் வளர்ந்தான். ஒரு நாள் அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​​​ராஜா அவரைப் பார்த்து, "இந்தப் பையன் ராஜாவாக வேண்டும் - என் மகன்கள் அல்ல" என்றார். பேரரசரின் மகன்கள் ஒன்பது பேர் வரிசையில் காத்திருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர் - யார் ராஜாவாக வருவார்கள் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டிருக்கலாம். மக்கள் வாக்குவாதம் செய்தனர், “அவர் யார்? அவர் காட்டில் வளர்ந்தார். பரதன் சொன்னான், “அவன் கண்களில் மகத்தான புத்திசாலித்தனத்தையும், அவன் இதயத்தில் பொங்கி எழும் நெருப்பையும் நான் காண்கிறேன். அவர் திறமையானவர் மற்றும் நிலையானவர். அவர் ராஜாவாக இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் ஜனநாயகத்தின் முதல் ஆர்ப்பாட்டம் இதுதான். இன்று நாம் இந்த உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்று நம்பலாம்.

ஆனால் சமீபத்திய சர்ச்சை குறித்து என்.சி.இ.ஆர்.டி., கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியுள்ளதாவது: பாரத் அல்லது இந்தியா ஆகிய இரண்டில், எதைப் பயன்படுத்துவது என்பது தேவையில்லாத ஒரு விவாதம். நம் அரசியலமைப்பு சட்டத்தில், இரண்டு பெயர்களும் உள்ளன. இடத்துக்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, இரண்டில் எந்தப் பெயரையும் பயன்படுத்தலாம். இது தொடர்பான விவாதங்கள் பயனற்றவை. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை. இந்த இரண்டு பெயர்களில் எதன் மீதும் எங்களுக்கு வெறுப்போ, துவேஷமோ இல்லை. அதனால், இரண்டு பெயர்களையும் பயன்படுத்துவோம்; பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயம் சமூக ஆர்வலர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்சிகர் ஆகியோர் கூறியதாவது: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் குழுவுக்கு ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வந்தோம்.ஆனால், பாட புத்தகங்களில் உள்ள சில விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சில பாடங்களில் உள்ள அம்சங்கள் பாரபட்சமாக இருப்பதாக கூறி, எங்கள் பெயர்களை ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி கடந்தாண்டே தெரிவித்திருந்தோம். ஆனால், எங்கள் பெயர்கள் பாட புத்தகங்களில் நீக்கப்படவில்லை. எனவே, எங்கள் பெயர்களை நீக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். என்று அவர்கள் தெரிவித்தனர்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement