For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’பூமர் அங்கிள்’ -விமர்சனம்!

08:12 PM Mar 31, 2024 IST | admin
’பூமர் அங்கிள்’  விமர்சனம்
Advertisement

முன்னொரு காலத்தில் நகைச்சுவையால் ரசிகர்களின் கவலையை மறைக்கச் செய்த காமெடி நடிகர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்றில்லாமல், நகைச்சுவை வசனம் மூலம் சிந்திக்க வைத்த கலைஞர்களும் உண்டு.ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் வெளிவருவதும், காமெடி நடிகர்களின் பங்களிப்பும் வெகுவாக குறைந்து விட்டது. அதை கவனத்தில் கொண்டு பூமர் அங்கிள் என்ற பெயரில் ஒரு கிச்சு கிச்சு சினிமா கொடுக்க முயன்றிருக்கிறார்கள். பூமர் அங்கிள் என்றால் யார் என்கிறீர்களா?ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதான நிலயில் பூமர் அங்கிள் ஆக இப்படத்தில் வருகிறார்.

Advertisement

அதாவது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை மேரேஜ் செய்துக்கொண்ட யோகி பாபு, அவரிடம் இருந்து டைவோர்ஸ் பெற முயற்சிக்கிறார். அப்படி டைவோர்ஸ் வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார்.இதற்கிடையே, யோகி பாபுவை பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் திடீர் வருகையாக ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வர, இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் கலாட்டாவையும், கலவரங்களையும் காமெடியாக கொடுக்க முயற்சித்திருப்பது தான் ‘பூமர் அங்கிள்’ கதை!

Advertisement

ஹீரோ லெவலில் வரும் போகும் யோகி பாபு, வழக்கம் போல் உடல் கேலி தொடர்பான வசனங்களை பேசி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அவரது வசனங்களில் சிரிக்க வைப்பதற்குப் பதில்,கடுப்பேற்றவே செய்கிறது. படம் முழுவதும் அரை டிராயர் போட்ட பெண்கள் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்க இதெல்லாம் போதாது என்று இரண்டாம் பாதியில் அதே அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு ஓவியா வந்து நடனமாடி சண்டையெல்லாம் போட்டுவிட்டுப் போகிறார். (அவரும் ஒரு சூப்பர் ஹீரோயின்)

இப்படத்தின் கதையாகக் கேட்கும் போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது ஆனால் படமாக்கும் போது இயக்குனர் ஸ்வதேஷ்.எம். எஸ். ரொம்பவும் கன்ஃப்யூஸ் ஆகி விட்டார் போலும். யோகிபாபு உள்பட கமிட் ஆன எல்லா காமெடியன்களும் தங்களுக்கு என்ன வருமோ அதைச் செய்துவிட்டு போகிறார்கள். கிளாமர் நடிகை சோனாவும் சின்ன ஒரு கேரக்டரில் வருகிறார். ஆனால் அவருக்குப் புடவை கட்டி வந்து நோகடித்து விட்டு போகிறார்.

சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவும், சந்தான் தர்மபிரகாஷின் இசையும் மோசமில்லை ரகம்

மொத்தத்தில் இம்புட்டு காமெடியன்கள் இருந்தும் நம்மை கொஞ்சமாவது சிரிக்க வைக்க முயற்சியாவது செய்திருக்கிருக்கலாம்

மார்க் 2/4

Tags :
Advertisement