பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி-ன் 'ஆர்பிடல்' நாவலுக்கு புக்கர் பரிசு!
சர்வதேச அளவில் பாப்புலரான புக்கர் பரிசு பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி(49) எழுதிய 'ஆர்பிடல்' என்னும் விண்வெளி தொடர்பான நாவலுக்கு வழங்கப்பட்டது.லண்டனில் உள்ள ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில், புக்கர் பரிசு 2024 வென்ற சமந்தா ஹார்விக்கு ரூ.54 லட்சம் (64,000 அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்பட்டது.
புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைகதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடுவர்கள் குழு அந்த ஆண்டின் சிறந்த படைப்பைத் தீர்மானிக்கிறது. அந்த படைப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நீதிபதிகள் குழுவில் புகழ்பெற்ற கலாச்சார வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுவர்.
சர்வதேச புக்கர் பரிசு 2005 இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது, ஆலிஸ் மன்ரோ, லிடியா டேவிஸ் மற்றும் பிலிப் ரோத் ஆகியோர் ஆரம்பகால வெற்றியாளர்களில் சிலர். 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. புதிய விதிகள் மற்றொரு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில், ஆண்டுதோறும் ஒரு சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடுகிறது. £64,000 பரிசுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி தனது ஆர்பிட்டல் நாவலின் மூலம் மதிப்புமிக்க 2024 புக்கர் பரிசை வென்றுள்ளார், இது விண்வெளியில் அமைக்கப்பட்ட கதைக்கு கிடைக்கப் பெற்ற முதல் புக்கர் விருது என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது. லண்டனின் ஓல்ட் பில்லிங்ஸ்கேட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் அவருக்கு £50,000 (இந்திய மதிப்பில் ரூ.53.7 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புக்கர் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை ஹார்வி பெற்றார், இது இலக்கியத்தில் பெண்களுக்கு ஒரு பெரிய மைல்கல்லைக் குறிக்கிறது.
பரிசு வழங்கிய நடுவர் எட்மண்ட் டி வால் கூறுகையில் '['சமந்தா ஹார்வி, இந்த நாவலை கோவிட் -19 பாதிப்பால் உலகமே பாதிக்கப்பட்டு லாக்டவுன் ஆன போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் பற்றிய கதையாக எழுதியுள்ளார்.கடந்த 2020ல் எழுத தொடங்கி, இது அவர் எழுதிய 5வது நாவல். இறுதி போட்டியில் இருந்த 6 பேரில் இவருடைய நாவல் தான் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்றவர்களை காட்டிலும், இவருடைய நாவல் அதிக பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. பூமியின் அழகை விண்வெளியில் இருந்து பார்க்கும்போது என்ற அவரது சித்தரிப்பைப் வாசகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.அவருடைய வரிகள், உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் நமக்கு காட்டுகின்றன'' என நடுவர் எட்மண்ட் டி வால் கூறினார்.
சமந்தா ஹார்வி கூறுகையில், ''நான் இந்த நாவலை, கோவிட்-19 முழு அடைப்பால் வீட்டில் இருந்த போது எழுதினேன். ஆறு கதாபாத்திரங்களின் அனுபவத்தை, அடைபட்ட ஒரு டின் கேனில் சிக்கிய அனுபவத்துடன் ஒப்பிட்டுள்ளேன். விண்வெளி வீரர்கள் பதினாறு சூரிய உதயங்களையும் பதினாறு சூரிய அஸ்தமனங்களையும் கண்டபடி உலகத்தை சுற்றி வருவதைக் விளக்கி கூறியிருந்தேன். தற்போது இந்த நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றது மிக்க மகிழ்ச்சியான தருணம்'' என்றார்.