தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

" புளூஸ்டார் " படம் ஜனவரி 25 ரிலீஸ்!

08:40 PM Jan 06, 2024 IST | admin
Advertisement

டிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "புளூஸ்டார்". ஆம் தம்பதி ஆகிவிட்ட அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனை ஒரே சமயத்தில் திரையில் பார்க்கும் வகையில் இருவரும் இணைந்து நடித்துள்ள படமிது.

Advertisement

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் அறிவு மற்றும் உமாதேவி.இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

Advertisement

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார். அதாவது இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டன்களாக உள்ள அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருக்கு இடையேயான மோதல், அவர்களின் காதல் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ்
தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி ,
G சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித்
இணைந்து தயாரித்துள்ளனர்

Tags :
asokeselvanBluestarJanuary 25!moviepa ranjithreleases
Advertisement
Next Article