தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நீதி தேவதையின் கண்கட்டு அவிழ்ந்தது!

08:06 AM Oct 17, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும், பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பதையும் குறிக்கும் வகையில், கண்கள் கட்டப்பட்டு இருக்கும்.இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளுக்கான நூலகத்தில், கண்கள் கட்டப்படாத, வாள் இல்லாத நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின்படி, இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டம் பார்வையற்றது அல்ல என்பதை குறிக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல், புதிய நீதி தேவதையின் சிலையில், வாளுக்கு பதிலாக அரசியலைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது. வாள் என்பது வன்முறை குறிக்கும் என சந்திரசூட் கருதுவதாகவும், எனவே வாளுக்கு பதில் அரசியலைப்பு புத்தகம் இடம்பெற வேண்டுமென்பது அவரது கருத்து எனவும் சொல்லப்படுகிறது.

Advertisement

முன்னதாக குற்றவாளிகள், சாட்சி சொல்வபர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் கருதினர். அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றச்சட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது. இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும். யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன என்று சொல்லப்பட்டது.

Advertisement

இந்நிலையில் மேற்கண்ட அடையாளத்தை மாற்றும் விதமாகவும் ‛சட்டத்தின் முன் சமத்துவம் ' என்பதை வலியுறுத்திட சுப்ரீம் கோர்ட் ன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.

1)இப்புதிய நீதிதேவதை சிலை சொல்லும் செய்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ‛சட்டம் குருடு அல்ல ' என்பதையும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்திட நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறிக்கிறது. எனவே சட்டம் ஒருபோதும் குருடாகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்ந்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.

2)இடது கையில் தராசுக்கு பதிலாக நம் அரசியல் சாசன புத்தகம் நம் நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறது.

3) நம்சமூகத்தில் சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இரு தரப்பு உண்மைகளும் வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தவே வலது கையில் நீதியின் தராசு உள்ளது.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், நாம் நாட்டை ஆண்டஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் பரவலான மாற்றம் கொண்டு வரப்பட்டு கடந்த ஜூலை-1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் உத்தரவின் பேரில் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை, கண்களைத் திறந்து, இடது கையில் வாள் மாற்றப்பட்டு அரசியலமைப்புச் சட்ட புத்தகம், என புதிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டுள்ளது முன் முயற்சியாகக் கருதப்படுகிறது.இந்திய தண்டனை சட்டம் போன்று காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை பாரதீய நியாய சன்ஹிதாவுடன் மாற்றியமைத்தது போல், காலனித்துவ பாரம்பரியத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags :
ChandrachudJusticeStatuesupremecourtசிலைசுப்ரீம் கோர்ட்நீதி தேவதை
Advertisement
Next Article