தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இடைத்தேர்தல்களில் 13க்கு 2 மட்டுமே வென்ற பாஜக!

09:08 PM Jul 13, 2024 IST | admin
Advertisement

ந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி பலம் பெற்றிருக்கும் பின்னணியில் இந்த இடைத்தேர்தல் பலப்பரீட்சை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பீஹார், மேற்குவங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

Advertisement

மேற்குவங்கம்:

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராய்கஞ்ச் தொகுதியில் கிருஷ்ண கல்யாணி, ரானாகட் தக்ஷினில் முகுத் மணி அதிகாரி, பாக்தாவில் போட்டியிட்ட மதுபர்னா தாகுர், மணிக்தாலாவில் போட்டியிட்ட சுப்தி பாண்டே ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இதில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

உத்தராகண்ட்:

உத்தராகண்டின் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகபத் சிங் புடோலா மற்றும் மங்களூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குவாசி முகம்மது நிஜாமுதீன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் பாஜக 2ம் இடம் பிடித்தது. இதில் குவாசி முகம்மது நிஜாமுதீன் 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தமிழ்நாடு:

தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக-வின் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளரைவிட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். நாம்தமிழர் கட்சி 10,602 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலம் மேற்கு ஜலந்தர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மொகிந்தர் பாகத் 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தினார். இத்தொகுதியில் காங்கிரஸ் 3ம் இடம் பிடித்தது.

இமாச்சலப்பிரதேசம்:

இமாச்சலப் பிரதேசத்தின் டேக்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மாநில முதல்வர் சுகுவின் மனைவியுமான கமலேஷ் தாக்கூர் வெற்றிபெற்றார். மற்றொரு தொகுதியான ஹர்மிர்பூரில் பாஜக வேட்பாளர் ஆஷிஷ் ஷர்மா 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை வீழ்த்தினார். நலகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா பாஜகவை தோற்கடித்தார்.

மத்தியப்பிரதேசம்:

மத்தியப்பிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா, காங்கிரஸ் கட்சியின் தீரன் ஷா சுகாராம் தாஸ் இன்வாடியை 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பீஹார்:

பீஹார் மாநிலத்தின் ருபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஷங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கலந்தர் பிரசாத் மண்டலை வீழ்த்தினார். இத்தொகுதியில் ஆர்ஜேடி கட்சி 3-ம் இடம் பிடித்தது.

ஆக நடந்து முடிந்த 13 தொகுதி இடைத்தேர்தலில் 10 தொகுதிகள் இந்தியா கூட்டணி கட்சிகளும், 2 தொகுதிகளில் பாஜகவும், ஒரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றிபெற்றுள்ளனர்.

Tags :
Bjpby electioncongress
Advertisement
Next Article