தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉பழங்குடி மக்களால் `மண்ணின் தந்தை' என்று அழைக்கப்பட்ட பிர்சா முண்டா💐

08:30 AM Nov 15, 2023 IST | admin
Advertisement

ங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடம் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் ஆவர் . பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. இவரின் பெயரால் சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சின்த்ரி என்ற இடத்தில் பிர்சா தொழில் நுட்ப மையம் Birsa Institute of Technology Sindri) ஒன்றும், பெருல்லா (Purulia) என்ற இடத்தில் சித்தா கன்கோ பிர்சா பல்கலைக்கழகம் (Sidho Kanho Birsha University) மற்றும் ராஞ்சியில் பிர்சா முன்டா அத்லடிக் வளாகம் (Birsa Munda Athletics Stadium) ஒன்றும் அவரின் நினைவாக அரசு நிறுவியுள்ளது. அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்.

Advertisement

அப்பேர்ப்பட்டவரின் வாழ்க்கைக் கதையின் சுருக்கம் இதோ:

Advertisement

பிஹாரும் ஜார்கண்டும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில் 15 நவம்பர் 1875-ல் முண்டா எனும் பழங்குடி சமூகத்தில் எளிய, வறுவமையான குடும்பத்தில் பிறந்தவர் பிர்சா முண்டா. புஹண்டா எனும் காட்டு பகுதியில் ஆடு மேய்ப்பது மற்றும் சில சிறு வேலைகளை செய்வது என்று இவரின் இளமை காலம் இருந்தது. இவரின் இளமைப் பருவத்தில் கிறிஸ்துவம் மதத்தின் மீது பற்றுகொண்டு அந்த மதத்திற்கு மாறினார். பின் தான் பிறந்த முண்டா சமூகத்தைப் பற்றி தெரியவர, பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட அவர் தன்னை அதற்கான போராட்டத்தில் ஈடுபடுத்திகொண்டார்.

அப்போதைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா. அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் "காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்" எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.இதை எதிர்த்து பிர்சா முண்டா "நீர் நமது! நிலம் நமது! வனம் நமது" எனும் கோஷத்தை எழுப்பி பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். 1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். அதுவே பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமாகும்.

தொடர்ந்துநிலப்பிரபத்துவர்கள் பழங்குடியினரின் நிலங்களையும் உடைமைகளையும் ஆக்ரமிப்பு செய்வதைக்கண்டு. அதை எதிர்த்து முதலில் பிர்ஸா முண்டா போராட்டம் நடத்தினார். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். அதிகாரத்தை எதிர்த்து போராட அங்கிருக்கும் பழங்குடி மக்களை எல்லாம் ஒன்றிணைத்து நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராட தொடங்கினார். அவர் ஒருங்கிணைத்த போராட்ட குழுவிடம் ‘பொய் பேச கூடாது, மது அருந்த கூடாது, கடவுளுக்கு என்று உயிர் பலிகளை கொடுக்கக்கூடாது, பெரியவர்களை மதிக்கவேண்டும் மற்றும் உடலும், மனமும் தூய்மையாக இருக்க வேண்டும் போன்ற பண்புகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவரின் தொடர் போராட்டங்களை அடுத்து, பிரிட்டிஷ் அரசு அவர்களை விசேஷமாக கவனிக்கத் தொடங்கியது. மேலும் பிர்ஸாவின் செயல்பாடுகளையும் எதிர்த்து நிற்க தொடங்கியது.அதனால் 1895-ல் பிரிட்டிஷ் அரசால் பிர்ஸா கைது செய்யப்பட்டார். இவரின் கைதைக் கண்டித்து பிர்ஸாவின் படை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது. .

1895-ல் கைது செய்யப்பட்ட பிர்ஸா முண்டா இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தார். அந்த இரண்டு வருடங்களும் பிரிட்டிஷாருக்கும் முண்டா பழங்குடி மக்களுக்கும் இடையில் பெரிய போராட்டங்கள் நடந்திருக்கிறது. 1897-ல் பிர்ஸா விடுதலையாகி வெளியேவந்தார். மீண்டும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நிலத்திற்காகவும் தீவிரமாக போராட தொடங்கினார். 1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர்.

பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக 1900-ம் வருடம் பிப்ரவரி 3-ம் தேதி மீண்டும் சிறைப்படுகிறார் பிர்ஸா. இம்முறை சிறை சென்ற பிர்ஸா பிணமாகத்தான் வெளியுலகத்திற்கு வருகிறார். 1900 ஜூன் 9-ம் தேதி தனது 25-து வயதில் பிர்ஸா, காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தார் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

நிலப்பிரபுத்துவம், பிரிடிஷ் அரசு எதிர்ப்பு என தனது 20 வயதில் போராட்டத்தை தொடங்கிய பிர்ஸா முண்டா திருமணம் செய்துகொள்ளாமல். அதிகாரத்திற்கு எதிராக பழங்குடி மக்களின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி தனது 25 வயதில் மரணம் அடைந்தார். இவரின் போராட்டங்கள் எதுவும் இந்திய விடுதலை போராட்டம் என்ற அடிப்படையில் பேசப்படவில்லை. அதற்கு காரணம் அன்று, ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இல்லை. ஆனால் அதன் பின் வந்த நம் இந்திய விடுதலை போராட்ட தலைவர்களும் வீரர்களும் பிர்ஸாவை முன் உதாரணமாக எடுத்து பேசினர். அதன் பின் அவரின் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது.
பழங்குடியினரின் நிலத்தை யாரும் அவர்களிடம் இருந்து அபகரிக்கக்கூடாது என்று பிரிடிஷ் அரசை எதிர்த்தும், அதேபோல் பழங்குடியினருக்கும் சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளும் இருக்கிறது என்றும் பேசினார். இந்த இரண்டு இலக்குகள்தான் இவரின் போராட்டத்தில் முன்னின்றவை.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
`Father of the Soil'Birsa Mundaindependence activisttribal people
Advertisement
Next Article