தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள்!

07:23 AM Apr 21, 2024 IST | admin
Advertisement

♥பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டால் ஞான ரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்💟' என்பது புதுமைப்பித்தன் வாக்கு.

Advertisement

💓பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அங்ஙனம் தொண்டாற்றிய பல்துறைகளுள் ஒன்று பெண் முன்னேற்றம். பெண் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் பாரதிதாசன் பாடல்களில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.

கவிஞர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், சினிமா பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகம்கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது அவ்வளவாகப் பிரபலமாகாத செய்தி. பார்ப்பனர்களைத் திட்டும் பெரியார், ஒருமுறை திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரித் தாளாளரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். `என்ன நீங்கள் பார்ப்பனரான அவரைப் புகழ்கிறீர்களே?’ என்று கேட்டதுபோது பெரியார் சொன்னாராம், `அவர் பெண்கள் படிக்க அல்லவா கல்லூரி நடத்துகிறார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன செய்வது?’ என்றாராம். அதுபோலதான் பாரதிதான், கடைசிவரை பாரதியாரை `ஐயர்' என்றுதான் அழைத்துவந்தார். அதைக் குறித்து கேட்டபோது, `ஐயர் போல இங்கு யார் சிந்திக்கிறார்?’ என்றாராம்.

Advertisement

'💝ஆணாய்ப் பிறப்பது அருமை, பெண்ணாய்ப் பிறப்பது எருமை' என்று பேசித் திரியும் உலகம் இது. ஆண் குழந்தையையே போற்றிப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் இன்றைய நிலையில், பெண் குழந்தைக்கும் தாலாட்டுப் பாடிய பெருங்கவிஞர் பாரதிதாசன்.🙏🏼 'குழந்தையில் ஆண், பெண் இரண்டும் ஒன்றே. இரண்டில் எதுவாக இருந்தாலும் பேணி வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடன்' என்று அறிவுறுத்தியவர்.

1964-ம் வருடம், இதே ஏப்ரல் மாதம் 21-ம் நாள்… உடல்நலக் குறைவால் சென்னைப் பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இன்னுயிர் பிரிந்தது. அடுத்து புதுவை பெருமாள் கோவில் தெரு இல்லத்துக்கு அவர் உடல் போய் சேர்ந்தது. எப்போதும் அவரை அகலாமல் இருந்த ஒரு சிறு கூட்டம்தான் அவருடைய இறுதி ஊர்வலத்திலும் கண்ணீருடன் முன்னால் நடந்தது. பாப்பாம்மாகோவில் மயானத்தை அடைந்தபோது, அதிலும் பலர் பாதியிலேயே திரும்பிவிட்டதைக் கண்டோர் நெஞ்சு பதைத்ததுத் தனி எஇப்போர்ட் .

அப்பேர் பட்ட பாரதிதாசன் பாடல் ஒன்றை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்:

💥சங்கே முழங்கு , சங்கே முழங்கு , சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு ...சங்கே முழங்கு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்,
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
சங்கே முழங்கு, சங்கே முழங்கு, சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!
தமிழ் எங்கள் மூச்சாம்💥

வாத்தீ .அகஸ்தீஸ்வரன்

Tags :
BharathidasanBhavendharKanaka SubburathinamTamil activistTamil poetTeacher
Advertisement
Next Article