தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

க்ரைம் லிஸ்டில் தென்னந்தியாவின் நம்பர் 1 நகரம் பெங்களூரு!.

06:05 PM Apr 06, 2024 IST | admin
Advertisement

பெங்களூரு பூங்கா நகரம், தகவல் தொழில் நுட்ப நகரம் என பல்வேறு புனைப்பெயர்களுடன் அழைக்கப்படுவதுடன் அனைத்து துறைகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய பெரு நகரங்களில் (tier-1 cities) பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. அத்துடன் எத்தனை தூரம் நடந்தாலும் வியர்க்காத அந்த நகரைப் பற்றி புதிதாக வந்துள்ள செய்திதான் கவலை அளிக்கிறது. அதாவது தென்னிந்தியாவிலேயே அதிக குற்ற வழக்குகள் நடைபெறும் நகரம் பெங்களூரு என்று செர்பிய நாட்டை சேர்ந்த அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டதுதான் இக்கவலைக்குக் காரணம்.

Advertisement

கர்நாடகா ஸ்டேட், பெங்களூருவில் குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும் குற்ற வழக்குகள் குறைந்தபாடில்லை என்று போலீஸாரே சலித்துக் கொள்கிறார்கள்.. அந்த வகையில் செர்பியாவை தளமாகக் கொண்ட ஆன்லைன் டேட்டா பேஸ் நிறுவனமான நம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், " குற்ற வழக்குகளில் தென்னிந்தியாவில் பெங்களூரு நகரம் நம்பர் 1 ஆக திகழ்கிறது. அது மட்டுமின்றி, உலகின் 200 நகரங்களில் பெங்களூரு 102வது இடத்தில் உள்ளது. உலகின் மிக அதிகமான குற்றங்கள் வெனிசுலாவில் உள்ள கார்காசோன் நகரத்தில் நடப்பதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரம் உள்ளது. தற்போது பெங்களூரு தென்னிந்தியாவின் நம்பர் 1 நகரமாக உள்ளது.

Advertisement

சுமார் 200 நகரங்களின் குற்றவழக்குகளைப் பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும் உள்ளன.குருகிராம் 95 இடத்திலும், பெங்களூரு 102 இடத்திலும், இந்தூர் 136 இடத்திலும், கொல்கத்தா 159 இடத்திலும், மும்பை 169 இடத்திலும் உள்ளன. தெலங்கானா மாநிலத்தில் ள்ள ஹைதராபாத் 174 இடத்திலும, சண்டிகர் 177 இடத்திலும், புணே 184 இடத்திலும் இருப்பதாக நம்பியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags :
Bengaluru.crime list!number 1 citySouth India.
Advertisement
Next Article