For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு1

01:56 PM Jun 13, 2024 IST | admin
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு1
Advertisement

ங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு 07.06.2024 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு 27ஆம்  தேதிவரை விண்ணபிக்கக் கேட்டுள்ளது. வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

Advertisement

பணி விவரம்

அதிகாரி - குரூப் “A” Officers (Scale-I, II & III)

Advertisement

உதவி அலுவலர் ( Group “B”)

தமிழ்நாடு - வங்கிகளில் உள்ள மொத்த பணியிடங்கள் -377

இதற்கு தேசிய அளவிலான பொதுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மொத்த பணியிடங்கள் - 9,995

’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகள்:

ஆந்திர பிரதேசம், அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம்,பிகார்,
சண்டிகர்,சட்டிஸ்கர், டெல்லி,கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம்,ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட்,கர்நாடகா,கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, லடாக், லட்சத்தீவுகள், மத்திய பிரதேசம்,மாஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா,மிசோரம்,நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான்,சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட வங்கிகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அறிவிப்பில், “ANNEXURE I VACANCIES UNDER CRP-CLERKS-XIII' என்ற பகுதியில் விரிவான விவரங்களை காணலாம். மேலும் இந்த பகுதிகளில் உள்ள கிராம வங்கிக் கிளை அலுவலங்களில் தேர்ந்தெடுப்படுவர்கள் பணியமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

21.07.2023-ன் படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Officer Scale I,II, III ஆகிய க்ரேடுகளில் உதவி மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம், Agricultural Marketing ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.

Specialist Officers பணியிடத்திற்குChartered Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க 1-2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருப்பது சிறப்பு.

வயது வரம்பு விவரம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் முதல் நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்ப கட்டணம்:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.850, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், PwBD/EXSM ஆகியோர் ரூ.175 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்


முதன்மை தேர்வு பாடத்திட்டம்:


எப்படி விண்ணப்பிப்பது?

https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.

முக்கிய நாட்கள்:

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://ibps.in/wp-content/uploads/CRP_RRBs_XIII_notification_7.6.24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

இது தொடர்பான அறிவிப்புகளை https://www.ibps.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.06.2024

Tags :
Advertisement