தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வங்கதேச கலவரம்: 30 பேர் பலி!-இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

01:10 PM Jul 19, 2024 IST | admin
Advertisement

ங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல், 24 மணி நேர அவசரகால எண்களையும் இந்தியா அறிவித்துள்ளது.

Advertisement

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் பல மாணவர்கள் உள்பட 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. வங்கதேச அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய வசதியை முடக்கியுள்ளது. மெட்ரோ ரயில்கள் உட்பட போக்குவரத்து சேவை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல், 24 மணி நேர அவசரகால எண்களையும் இந்தியா அறிவித்துள்ளது

Tags :
30 killedBangladeshindiansriotwarningஇட ஒதுக்கீடுகலவரம்வங்கதேசம்
Advertisement
Next Article