For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய மசாலா பாக்கெட்களுக்கு தடை மேல் தடை!...

09:54 PM Apr 22, 2024 IST | admin
இந்திய மசாலா பாக்கெட்களுக்கு தடை மேல் தடை
Advertisement

லக பழக்க வழக்கங்களெல்லாம் மாறி வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பது குறைந்து வருகிறது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுகளிலும் பாக்கெட் மசாலாவின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையிலான ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமானது இந்திய மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.அப்போது எம்டிஹெச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறி மசாலா சாம்பார் மசாலா, கறி மசாலா மற்றும் எவரெஸ்ட் ன் மீன் கறி மசாலா போன்ற மசாலா வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள உணவு பொருட்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது நமது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த மசாலா பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் உள்ள பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் நம் நாட்டு நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாக கூறி, சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய அரசுகள் விற்பனைக்கு தடை விதித்து அதிரடி காட்டியுள்ளன.

Advertisement

மசாலா பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மசாலா பொருட்களுக்கு இத்தகைய சிக்கல் எழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு Everest நிறுவனத்தின் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் தடை விதித்தது.

Advertisement

இப்போது எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 மசாலா பிராண்ட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவை எம்டிஹச் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவை ஆகும். இவை மனிதர்கள் உணவில் சேர்த்து கொண்டால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்து ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது. எனவே சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜென்சியின் வழிகாட்டுதலின் படி, குரூப் 1 கார்சினோஜென் பட்டியலில் சேர்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இவற்றுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவுப்பொருள் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.உடனடியாக கடைகளில் இருந்து மேற்குறிப்பிட்ட மசாலா பாக்கெட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நச்சுப் பொருள் இருப்பதாக கூறப்படும் மசாலா பாக்கெட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆக இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் சரியான முறையில் ஆய்விற்கு உட்படுத்திய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது தயாரானவை. முதலில் இங்கு 100 சதவீதம் ஆரோக்கியமானது என உறுதி செய்யப்பட்டால் தான் வெளிநாடுகளில் நன்மதிப்பு கிடைக்கும்.எனவே உணவுப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு சரியான வழிகாட்டுதல்களை அமல்படுத்தி, அவற்றை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement