தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வரும் கல்வியாண்டு முதல், 2 ஆண்டு B.Ed படிப்புக்குத் தடை!

06:17 PM Jan 11, 2024 IST | admin
Advertisement

ரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. அதே சமயம் புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில்,4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இளநிலை படிப்புகளான பேச்சிலர்ஸ் டிகிரியில் 3 ஆண்டுகள், பி.எட்., எனப்படும் பேச்சிலர்ஸ் ஆப் எஜுகேஷன் படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் ஆசிரியர் பணி மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு பி.ஏ படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இருப்பினும் சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டு பி.எட்., படிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு (2024-2025) முதல் 2 ஆண்டு பி.எட்., படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்சிஐ) அறிவித்துள்ளது. மேலும் 4 ஆண்டு பி.எட்., திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் 2 ஆண்டு பி.எட் படிப்பில் சேர்ந்தவர்கள், இவ்வாண்டுடன் அந்த படிப்புகளை முடித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் புதிய கல்வி ஆண்டிலிருந்து இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், ஓராண்டுக்கு முன்னதாகவே பி.எட்., படிப்புகளை முடித்துவிட்டு, பணிகளுக்கு செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags :
b.eddegree?EducationTeching
Advertisement
Next Article