For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

01:47 PM Sep 13, 2024 IST | admin
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்   சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement

டெல்லி முதல்வரும்ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி சுப்ரீம் கோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து ஜூன் 26-ம் தேதி சிபிஐ அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது.இந்த சூழலில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜுலை 12-ம் தேதி கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் நீடித்தது.

Advertisement

இந்த கைதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கேஜ்ரிவால் 176 நாட்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார்.

Advertisement

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அக்.5ம் தேதி நடைபெற உள்ள ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாஜக மற்றும் தனது கூட்டாளியான இண்டியா கூட்டணியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் கேஜ்ரிவாலின் கைது சட்டப்பூர்வமானது, எந்த விதிமுறை மீறல்களும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் பிணையத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இந்த வழக்கைப் பற்றி பகிரங்கமாக எந்த கருத்தும் வெளியில் பேசக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Tags :
Advertisement