அயோத்தி ராமர் கோயில் பூசாரி லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் காலமானார்!
பாஜக மோடியின் சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னின்று நடத்தியவரும், வாராணசியின் மூத்த ஆன்மிக அறிஞர்களில் ஒருவராக அறியப்பட்டவருமான ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் உடல்நல குறைவால் இன்று (ஜூன் 22) காலமானார். அவருக்கு வயது 86.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்தது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டது. அப்போது, கும்பாபிஷேக விழாவில் பூஜைகள அனைத்தையும் தலைமையேற்று நடத்தியவர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித்.
இவர் உடல்நல குறைவால் இன்று (ஜூன் 22) காலமானார். அவருக்கு வயது 86. மஹாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். கடந்த சில நாட்களாக, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீக்ஷித், மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர்.