தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அயோத்தி ரயில் நிலைய பெயர் “அயோத்தி தாம்” என மாற்றப்படுதாம்!

02:08 PM Dec 28, 2023 IST | admin
Advertisement

பியில்  டிசம்பர் 30-ம் தேதி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நேரில் திறந்து வைக்க இருக்கும் நிலையில், அயோத்தி ரயில் நிலையம் என்ற பெயர் “அயோத்தி தாம்” என மாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி அயோத்தி ரயில் நிலையம் என்ற பெயர், ‘அயோத்தி தாம்’ என்று மாற்றப்படுகிறது. பொது மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது,” என்று லல்லு சிங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராமர் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்து தரிசனம் செய்யவுள்ளனர். இதனால் அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணி என்பது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ரயில் நிலையத்தை டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

Advertisement

இதற்கிடையே தான் இன்று அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில்வே சந்திப்பு (Ayodhya Railway Juction) என அந்த ரயில் நிலையத்துக்கு பெயர் இருந்த நிலையில் தற்போது அது அயோத்தி தாம் சந்திப்பு (Ayodhya Dham Junction) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அயோத்தியின் மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அயோத்தி தாம் என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது.

புதிய ரயில் நிலையத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ரயில் நிலையத்தில் 12 லிஃப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

Tags :
“Ayodhi Dham”!Ayodhyaname will be changedrailway station
Advertisement
Next Article