For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அயலான் விமர்சனம்!

02:27 PM Jan 13, 2024 IST | admin
அயலான் விமர்சனம்
Advertisement

நம் கோலிவுட்டில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் தாண்டியும் ஓடும் சில சினிமா விளம்பரங்களில் குடும்பங்கள் கொண்டாடும் என அறிவிப்பார்கள் இல்லையா? அப்படி இல்லாமல் . உண்மையில் குடும்பங்கள் கொண்டாடும் சினிமாவாக அதிலும் 2017-ஆம் ஆண்டு வாக்கில் பூஜைப் போடப்பட்டு ஏழாண்டுகளாக மெருகேற்றி வந்திருக்கும் இந்த அயலான் ரியல் ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி என்பதை யாரும் மறுக்க முடியாது.. அதிலும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை ரசிகர்களுக்கு தேவையான கமர்ஷியல் ஃபார்முலாவோடு வழங்கி இருக்கும் ஆர்.ரவிகுமார், தன் படைப்பு சகல தரப்பினருக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி புரியும் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார்.

Advertisement

அதாவது வானில் இருந்து இருந்து பூமியை வந்து தாக்கும் ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ என்ற ஒரு வஸ்து வில்லனின் கையில் கிடைக்கிறது. அந்த எரிக்கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிய வருகிறது. அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விசவாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை அறிந்துக்கொள்ளும் வேற்றுகிரகவாசிகள் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார்கள். அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரிக்கல்லை கைப்பற்ற வேற்றுகிரகவாசி ஒருவர் பூமிக்கு வருகிறார். சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிக்கல்லை எடுக்க வரும் வேற்றுகிரகவாசி, சிவகார்த்திகேயனுடன் நட்பாகி, தனது முயற்சியில் அவரையும் சேர்த்துகொள்ள, இருவரும் சேர்ந்து பூமியை அழிவில் இருந்து மீட்டார்களா?, இல்லையா?, வேற்றுகிரவாசிகள் பூமியை காப்பாற்ற நினைப்பது ஏன்? என்பதே படத்தின் அயலான் கதை.

Advertisement

நாயகன் சிவகார்த்திகேயன் வழக்கம் வாழும் நம்மாழ்வார் போல் நடமாடியபடி தனக்கு என்ன வருமோ அந்த உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பை காமெடி என்ற பெயரில் வழங்கி சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் சோகமாக நடிப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டவும் முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், வேற்றுகிரகவாசி படம் என்றாலும் சிவகார்த்திகேயன் வழக்கமான கமர்ஷியல் நாயகனாகவே வலம் வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக வேலை இல்லை, படம் முழுக்க ஏலியனை சுற்றி தான். ஏலியனோடு இணைந்து அவரும் எல்லா சேட்டைகளும் செய்து, ரசிக்க வைக்கிறார். படத்தில் அவரைத்தாண்டி கவர்வது யோகி பாபு கருணாகரன் கூட்டணிதான். கிடைத்த இடங்களில் எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். சில காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை இஷா கோபிகர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். வேற்றுகிரகவாசிக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் வேற்றுகிரகவாசியாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவனின் பணி சிறப்பு.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பது போல், ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜின் பங்களிப்பால் அயலான் ரிச்சாக தெரிகிறான்.. மேற்படி ஆர்டிஸ்ட்களை விட அந்த ஏலியன் 'டாட்டூ` பிரமிக்க வைக்கிறது.. சித்தார்த்தின் பின்னணி குரல் அதற்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறது. உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் குழுவான Phantom FX டீமுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையாம்.. டைட்டிலில் மட்டும் பேர் வாங்கி இருக்கிறார்.

பொதுவாக இதுவரை வந்த ஏலியன் திரைப்படங்களில் ஏலியன் பூமியை அழிக்க வரும், ஹீரோ பூமியை ஏலியனிடமிருந்து காப்பாற்றுவார். ஆனால் இந்த படத்திலும் மனிதன் பூமியை அழிக்கிறான், அதை காப்பாற்றிய ஏலியன் வருகிறது, அதனுடன் கூட்டு சேர்ந்து ஹீரோ பூமியை காப்பாற்றுகிறார். இந்த புதுமையான ஐடியாவே அட்டகாசமான இருக்கிறது.

அதிலும் மனிதர்களை போல் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டும், அவைகளுக்கும் இந்த பூமி சொந்தம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி எளிமையான முறையில் சொல்லியிருப்பதில் டைரக்டர் அவுட்ஸ்டேண்டிங் வாங்கி விட்டார்.

குறை சொல்லவும் சிலபல விசயங்கள் உள்ளது என்றாலும் குடும்பத்தோடு போய் பார்க்கத் தகுந்த படப் பட்டியலில் இணைந்து விட்டான் இந்த அயலான்

மார்க் 3 / 5

Tags :
Advertisement