தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு!எந்தெந்த மின்சார ரயில்கள் ரத்து.?

06:06 PM Jul 22, 2024 IST | admin
Advertisement

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை நாள்தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அப்படியான நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னக ரயில்வேயின் 55 மின்சார ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement

தாம்பரம் ரயில் நிலைத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் 55 மின்சார ரயில்கள் மேற்கண்ட காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

பிரதான ரயில்வே வழித்தடத்தில் 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதன் காரணமாக மாற்று பாதையில் ரயில்களும், மாநில போக்குவரத்து சார்பில் கூடுதல் பேருந்துகளும் இயக்கக்கப்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.20 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 வரையில் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் :

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு : காலை 09.30, 09.56, 10.56, 11.40, நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10.40 மணி.

சென்னை கடற்கரை – தாம்பரம் : காலை 09.40, 09.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 11.05, 11.30, 11.59 மணி.

சென்னை கடற்கரை – கூடுவாஞ்சேரி : இரவு 07.19, 08.15, 08.45, 08.55, 09.40 மணி.

தாம்பரம் – சென்னை கடற்கரை : காலை 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35 5 01.00 01.30 மற்றும் இரவு 11.40 மணி.

செங்கல்பட்டு – கும்மிடிபூண்டி : காலை 10.00 மணி

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை : காலை 9.30 மணி.

திருமால்பூர் – சென்னை கடற்கரை : காலை 11.05 மணி.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை : காலை 11.00, 11.30, நண்பகல் 12.00 மற்றும் இரவு 11.00 மணி.

கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை : இரவு 08.55, 09.45, 10.10, 10.25, 11.20 மணி.

சிறப்பு ரயில்களின் அட்டவணை :

சென்னை கடற்கரை – பல்லாவரம் : காலை 09.30, 09.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணி.

பல்லாவரம் – சென்னை கடற்கரை : காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.20, 12.40, 01.00 01.20, 01.40, இரவு 12.20, 12.45 மணி.

கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு : காலை 10.45, 11.10, நண்பகல் 12.00, 12.50, மதியம் 01.35, 01.55 மற்றும் இரவு 11.55 மணி.

செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி : காலை 10.00, 10.30, 11.00, 11.45, நண்பகல் 12.30, மதியம் 01.00 மற்றும் இரவு 11.00 மணி.

Tags :
cancelledchennaipassengersTrainWhich electric trainsசென்னைரயில்கள் ரத்து
Advertisement
Next Article