தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டவங்களுக்கு திகிலூட்டும் செய்தி!

02:43 PM Apr 30, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் மோடி அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று எப்படி ஊக்குவித்தார்கள், பின்னர் நாடேல்லாம் சென்று மார் தட்டிக்கொண்டு அதற்கான பிரதிபலனை எப்படி பெற்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது கோவிஷீல்டின் தாய் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா முதல் முறையாக, அதில் 𝗹𝗼𝗻𝗴 𝗹𝗮𝘀𝘁𝗶𝗻𝗴 𝘀𝗶𝗱𝗲 𝗲𝗳𝗳𝗲𝗰𝘁𝘀 உள்ளதென்று நேற்று UK உயர்நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. கோவிஷீல்ட் TTS க்கு ( 𝗧𝗵𝗿𝗼𝗺𝗯𝗼𝘀𝗶𝘀 𝗧𝗵𝗿𝗼𝗺𝗯𝗼𝗰𝘆𝘁𝗼𝗽𝗲𝗻𝗶𝗮 𝗦𝘆𝗻𝗱𝗿𝗼𝗺𝗲 ) வழிவகுக்குமாம், அது இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட்டுகளுக்கு வழிவகுக்குமாம். TTS மாரடைப்பு, மங்கலான பார்வை, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலிக்கான வாய்ப்புகளை அதிகரிக்குமாம்.

Advertisement

ஆம்.. கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்தச் செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.

Advertisement

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனாவை தடுக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியது. அதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அதன் பக்கவிளைவுகள் பற்றிய இந்தச் செய்தி கவனம் பெறுகிறது.

இந்தியாவில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்! இந்தியாவில் கோவிஷீல்ட், ஆதார் பூனாவாலாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ₹52 கோடி நன்கொடையாக வழங்கியது கூடுதல் தகவல்.

பிரிட்டனில் மட்டும் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணம் கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கின் முதல் புகார்தாரரான ஜேமி ஸ்காட் தரப்பில், “கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு ஜேமிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இதனை மறுத்து வாதிட்டு வந்தாலும் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS - Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முறையான சோதனைகள் இல்லாமல் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு, பல கோடி பேர்களுக்கு அளிக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

தடுப்பூசி போட்டதற்காக மோடிதான் காரணம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது இதற்கு பொறுப்பேர்ப்பார்களா?

Tags :
AstraZenecaCOVID vaccinecovishielddisorderrare blood clotshockingTTS
Advertisement
Next Article