தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் வாய்ப்புகள்

12:39 PM Dec 26, 2023 IST | admin
Advertisement

காப்பீட்டு, பொருளாதாரம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி (Assistant Manager Scale-I) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GENERAL INSURANCE CORPORATION OF INDIA) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 12ம் தேதிக்குள் (12.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: இந்த ஆட்சேர்க்கையின் மூலம் மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 15 வகைமையின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி,காலியிடங்கள் எண்ணிக்கை, சம்பள விவரம், கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்கும் முன்பு படித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

முக்கிய நாட்கள்:

அறிவிக்கை வெளியான நாள்: 23.12.2023 ;

விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 12.01.2024;

கணினி வழி எழுத்துத் தேர்வு: பிப்ரவரி மாதம்

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு, 01.10.2023 அன்று 21- 30 க்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகைகள் உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

அடிப்படை ஊதியம்: 50,925 (மற்றும் இதர படிகள் வழங்கப்படும்)

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல் கண்ட பிரிவினர்/ பட்டியல் கண்ட பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/பெண்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஆந்தை வேலைவாய்ப்பு/வழிகாட்டி என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழ வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

Tags :
Asst ManagersGICinsurancerecruitment
Advertisement
Next Article