For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிவாய்ப்பு!

07:08 PM Feb 03, 2024 IST | admin
நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிவாய்ப்பு
Advertisement

ம் நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை :

Advertisement

300

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்:

37,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை க்ளிக் செய்து வரும் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

15.02.2024

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in/assets/docs/recruitment/RECRUITMENT-OF-ADMINISTRATIVE-OFFICERS2023/DETAILED%20ENGLISH%20ADVERTISEMENT%20-%20ASSISTANT%20RECRUITMENT%202023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Tags :
Advertisement