For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய பொது சுகாதார அமைப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

09:37 PM Mar 21, 2025 IST | admin
இந்திய பொது சுகாதார அமைப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
Advertisement

இந்தியா முழுவதும் பொது சுகாதார சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சிறப்பு மையங்களாக அமைச்சகம் தேர்வு செயதுள்ளது.

Advertisement

இ- சஞ்சீவினியில் முடிவு எடுக்கும் முறை, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோய் மற்றும் அசாதாரண மார்பு எக்ஸ்ரே வகைப்படுத்தல் போன்றவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

Advertisement

காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், நுரையீரல் காசநோய்க்கான பரிசோதனைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான துறை சார்ந்த நடவடிக்கைகள் அமைச்சகத்தால் முறையாக எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement