சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்?
Tech Law Fest 2024 சிங்கப்பூர் சட்ட அமைச்சகமும் (Ministry of Law Singapore), சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகமும்(Singapore Acadamey of Law) இணைந்து இரண்டு நாள் கருத்தரங்கம் 11 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. சட்டத்துறையில் உற்பத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தான உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
அத்தொழில்நுட்ப சட்.டத் திருவிழாவில் சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே சட்டத்துறையில் Generative AI எனப்படும் உற்பத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தல் குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.
சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்தின் தலைமை அதிகாரி இயோங் சீ கின் மற்றும் மைக்ரோசாப்ட் நிறவனத்தின் துணைத் தலைவர், வெளியுறவு மற்றும் சட்டத்துறையின் துணைப் பொது அலோசகர் மைக் யெ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் கலாச்சாரம், இனம், மற்றும் இளைஞர் துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறையின் இரண்டாம் அமைச்சர் எட்வின் தாங் மற்றும் சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதி அதித் அப்துல்லா உடருந்தனர்.