For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

"சங்கடங்களை நினைத்துக் கவலையா? சம்மணமிடுங்கள்..."!

06:10 PM Nov 04, 2023 IST | admin
 சங்கடங்களை நினைத்துக் கவலையா   சம்மணமிடுங்கள்
Advertisement

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில் , நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...! நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

Advertisement

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம். யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

Advertisement

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

குறிப்பாக யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.

ஜெரென்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழவைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு. ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு, இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணீக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.

கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழகாசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.

இம்மாதிரி கிழே உட்காருவது நாகரிககுறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம். சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்துபோன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில்தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகிவிடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரிக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.

ஓஸ்டியோபெரோஒசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத்தன்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.
..
அதனால் கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது கூடா சம்மணம் இட்டே அமருங்கள்...!

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்... சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக!...

அகஸ்தீஸ்வரன் சாம்பசிவன்

Tags :
Advertisement