தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்!.

05:27 PM Feb 19, 2024 IST | admin
Advertisement

றிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் மார்ச் 20-ந்தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்க மாகும். குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உரு வாக்கப்பட்டது.

2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனை களின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags :
IsroYoung Scientist Programme
Advertisement
Next Article