அன்ஷூமன் கெய்க்வாட் மறைவு!
மறக்க முடியாத ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் அன்ஷூமன் கெய்க்வாட் ஆவார்! தனது மன உறுதியையும், துணிவைவயும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கெய்க்வாட், 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.வீரராக ஓய்வு பெற்றபின், 1997 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இரண்டு முறை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2000 ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடம் பிடித்தது. அதுமட்டுமின்றி, இவரது தலைமையின் கீழ் விளையாடிய போதுதான், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் பெற்றார்.
அதுமட்டுமின்றி, 1990களில் தேசிய தேர்வாளராகவும் அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில், பிசிசிஐயால் Col. C. K. Nayudu வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1974ம் ஆண்டு டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தைச் செய்த கெய்க்வாட், ஆரம்ப போட்டிகளிலேயே புகழ்பெற்ற திறமையாளராக திகழ்ந்தார். ஸுனில் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக தனது இடத்தை நிலைநிறுத்தி, 36 டெஸ்ட் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 40 டெஸ்ட் போட்டிகளில் 1,985 ரன்கள் எடுத்து, 30.07 சராசரியைப் பெற்றிருந்தார்.
1976ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த அதிரடியான போட்டியில் கெய்க்வாடின் வீரத்தை காண முடிந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 406 ரன்கள் அடித்து சாதனை செய்ததை தகர்க்க, க்லைவ் லாய்டு தலைமையிலான மேற்கிந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கெய்க்வாடை எதிர்கொண்டனர். மைக்கேல் ஹோல்டிங், வேன் டேனியல், ஜூலியன் மற்றும் ஹோல்டர் ஆகியோர் இணைந்து கெய்க்வாடின் துணிவை சோதனைக்கு உட்படுத்தினர்.
கெய்க்வாட் ஒரு செய்தியாளரிடம் கூறியதாவது: “அது மதிய உணவிற்கு முந்தைய இறுதி ஓவர், மிக்கி (மைக்கேல் ஹோல்டிங்) ரவுண்ட் தி விக்கெட் பந்துவீசி கொண்டிருந்தார். பந்து அடிக்கும் போது என் விரலில் அடிபட்டது. பெரிய விஷயமில்லை, என்று நினைத்து மீண்டும் என் இடத்தில் நின்றேன். ஆனால் ரத்தம் வழிய ஆரம்பித்தது. டெரிக் மொரே (விக்கெட் கீப்பர்) மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் வந்தனர். நான் அவர்களை மதிக்காமல் உன் வேலையை பார் என்பது போல் முறைத்தேன்.பந்து வீக வந்த. மிக்கியை பார்த்தபடி முடிஞ்சதை செய்து கொள் என்பது போல் விரலை அசைக்க , அடுத்த பந்தில் என் காதில் பாயும்படி வீசினார்.. என் தலையினுள் ஏதே நேர மணி ஓசைகள்! தரையில் கிடந்த நான் ஸ்ட்டிரச்சலில் தூக்கி செல்லப் விடவில்லை. உதவ வந்த அணியின் சகாக்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏக்நாத் (சோல்கார்) கையைப் பிடித்தபடி நடந்தே வெளியேறினேன்! இவ்வாறு, கைக்வாட் தனது துணிச்சலுடன், இந்திய கிரிக்கெட்டில் தன்னுடைய தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். கெய்க்வாட் தனது நிதிப் பிரச்சனையை சந்தீப் பாட்டிலீடம் தெரிவித்திருந்த நிலையில், பாட்டீல் அதனை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினார். இதன் பின்னர், கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி அளித்தது. அதுமட்டுமின்றி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் கபில்தேவின் தொடர் முயற்சியால் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் அவரது சிகிச்சை இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. வதோதராவில் அவருக்கு சிகிச்சைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது வீரத்தை நம் கிரிகெட் உலகில் நமக்கு பெற்று தந்த பெருமைகளையும் நினைவுகூர்ந்து அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்தித்து அஞ்சலி செலுத்துவோம்.