நம் உடம்பிற்கு மதுவை விட கோபம் மிக மோசமானது!.
இது சங்கிகளுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும், ஏன் எல்லோர்க்குமே பொருந்தும்.
ஒரு 8x10 ரூமில் 10 ஆண்களை அடைத்து வைத்தால் அவர்கள் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள், அல்லது சீட்டாட்டம் போல ஏதாவது விளையாடிக் கொண்டு இருப்பார்கள். காரணம், அவர்களுக்குள் பேசும்போது ஏதாவது ஒரு டாபிக்கில் அபிப்ராய பேதங்கள் வந்தால் அதை தவிர்த்து, அந்த விஷயத்தை கடந்து பைபாஸ் செய்வார்கள். அதனால்தான் அந்த சந்தோஷமும், பிரச்சினையற்ற போக்கும் அங்கிருக்கும்.ஆனால் அதே ரூமில் நான்கு பெண்களை அடைத்து வைத்தால், மேற்சொன்ன அதே அபிப்ராய பேதங்கள் வரும்போது, அதை இரண்டாக பிரிந்து, அந்த வித்தியாசத்தை முன்னிறுத்தி, அதை எப்படி அவள் சொல்லலாம் என்று சண்டையிடுவார்கள். அதற்கு மீதம் இருப்பவர்கள் சமாதான படுத்தாமல் அவர்கள் பங்குக்கு தூபம் போடுவார்கள்.
காரணம், சமுதாயத்தோடு விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பது ஆணின் தேவையாக இருந்தது. பெண்களுக்கு சமுதாயத்தோடு அதிகம் எக்ஸ்போஸ் ஆக வேண்டிய தேவை இல்லாமல் இருந்ததால் தான், தனது குடும்பம் என்ற சிறியளவு பார்வையோடு நின்றிருந்ததால், அவர்கள் பார்வை குறுகிய வட்டமாக இருந்தது. அந்த வேற்றுமை எளிதில் பிரச்சினையாக மாறியது. ஆனால் இன்று நேர்மாறாக இருக்கிறது. பெண்களிடம் ஒற்றுமையில் நல்ல முன்னேற்றமும், ஆண்களிடம் அது பற்றி எரியும் தீயாக எரிவதும் நல்லதல்ல. காரணம் இன்று அவர்களுக்கு நல்ல Social Exposer இருப்பதும், அவர்களிடம் அந்த தாயுள்ளம் என்ற அடிப்படை அன்பும், அதை தாண்டி Physical weakness என்பதும், கடந்த காலத்தில் அவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளும், inherit ஆகி அந்த முன்னேற்றத்தை கொடுக்கிறது.
இன்று அதிக பொறுப்புணர்வை பெண்களிடம் பார்க்கிறேன். ஆனால் மாறாக ஆண்களிடம் அது பெரியள்வில் தொய்வதையும் பார்க்கிறேன். நான் ஒருவர் மீது தவறான அபிப்ராயத்தை பொது வெளியில் வைக்கும்போது, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவர் திரும்ப பதிலுக்கு என்னைபிட ஆக்ரோஷமாகத்தான் வைப்பார், வைக்க வேண்டிய சூழலை நான் ஏற்கனவே ஏற்படுத்திவிட்டேன் என்பது என் தவறாகி விட்டது. நம்முடைய நோக்கம் என்பது எனக்கு மேலானது வீடு, வீட்டுக்கு மேலானது சமுதாயம் , அதற்கு மேலானது தேசம் என்று ஏற்கும் மன நிலை வந்துவிட்டால் நாம் கடந்துபோனால், இதுபோன்ற பிரச்சினைகளை மற்றவர் முன்னெடுத்தாலும், நாம் விலகிச்செல்ல முடியும். இது உங்களுக்கு மட்டுமல்ல, அரசியல் என்ற நிலைப்பாட்டில் நானும் அதே தவறை செய்கிறேன். அதை நாம் குறைக்க வேண்டும், ஏனெனில் நம் பயணம் நீண்ட பயணமாக அமையவேண்டும். நம் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் இந்த பயணம் மிக மிக அவசியம்.
இதை அனுபவ ரீரியில் உங்கள் மூத்த சகோதரனாக அன்போடு கேட்கிறேன். உங்களுக்கு, நமது தேசத்துக்கு எதிராக ஒரு கருத்தைத் பார்த்தால், உடனே பதில் சொல்லாதீர்கள், எழுதாதீர்கள். கொஞ்சம் வெளியே எழுந்து சென்று வாருங்கள். தண்ணீர் குடியுங்கள், ஒரு அரைமணி நேரல் கழித்து அதை மீண்டும் படியுங்கள். இப்போது கோபத்தின் அளவு குறைந்திருக்கும், அதற்கு பதில் எழுதுங்கள், ஆனால் போஸ்ட் செய்யாதீர்கள். மீண்டும் அரைமணி நேரம் கழித்து உங்கள் பதிலை படித்து பாருங்கள். அதில் இப்போது மாற்றம் தேவை என்பதை உணர்வீர்கள். தேவைப்பட்டால் செய்யுங்கள், போஸ்ட் செய்ய வேண்டாம். மீண்டும் அரை மணி நேரம், இப்போது, அவருடைய நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று யோசித்து பாருங்கள். 90% நேரத்தில் அந்த பதில் தேவையற்றதாக இருக்கும், கடந்து செல்வீர்கள்.
முக்கியமாக ஒரு எதிர்மறையான விஷயத்தை பார்க்கும்போது, நமது சுரப்பிகள் உடனே சுரக்கும். அந்த வகையில் விஷயம் அதீத தூண்டலை கொடுக்கும். அது பெரும்பாலும் தவறாகவோ, தேவையற்றதாகவோதான் இருக்கும். வீரம் என்பது விவேகத்தில், விவேகம் என்பது பொறுமையில். மேலும் நான் ஒரு விஷயத்தை குற்றம் சாட்டும் விதமாக சொல்லும்போது, நீ, நீங்கள் என்பதற்கு பதிலாக, அந்த தவறானதற்கு நான் என்று என் மீது பொறுப்பேற்கும் விதமாக அல்லது நாம் என்ற வார்த்தை நேரடியாக குற்றம் சாட்டும் தொனியை தவிர்த்து, கோபத்தை வெகுவாக குறைக்கும். எனெவே அந்த வார்த்தையில் நாம் என்பது பல வகைகளில் சமாதானாப் படுத்தும் தூதனாக இருக்கும். எனது பதிவுகளில் இதை நான் கையாள்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்!
மேலும், நம் உடம்பிற்கு மதுவை விட கோபம் மிக மோசமானது. இன்று நாம் சொல்லும் ஸ்ட்ரெஸ் என்பதற்கு அடிப்படை இதுதான். இதற்கு மிக முக்கிய காரணம் நம்மிடம் தன்னம்பிக்கை குறைகிறது என்பதே அதற்கான அர்த்தம். கோபம் பல தேவையற்த ஹார்மோன்களை உண்டாக்கி, உடல் நலனை பெரியளவில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும், சமுதாயத்தையும், தேசத்தையும் பாதிக்கிறது. நம் வீரம் வார்தையில் இல்லை, செயலில் இருக்கிறது. அதுவும் அரசியல் போன்ற தளத்தில் மேல் நோக்கி வளர வேண்டும் என்றால் இந்த தகுதிகள் மிக அவசியம். இந்த ஆலோசனை கூட எதிராக தோன்றலாம், அதே முறை, அரை மணி நேர இடைவெளி, அதை சரி செய்யும்.
உங்கள் மூத்த சகோதரனாக..