தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆந்திரா: மாநில காங்கிரஸ் தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா!

05:12 PM Jan 16, 2024 IST | admin
Advertisement

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4ஆம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவரது இந்த செயல்பாடு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றது. “காங்கிரஸ் நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாகும், அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது” என்றும் ஷர்மிளா கூறியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை இன்று (ஜன.16) ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் தெரிகிறது.

Advertisement

இதனையடுத்து ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து பதவியை ராஜினாமா செய்துள்ள கிடுகு ருத்ர ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிறப்பாக பணியாற்றிய கிடுகு ருத்ர ராஜுவை கட்சி பாராட்டுகிறது" என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உள்ளார். அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைவராக களமிறங்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags :
andhrapresidentState CongressYS Sharmila
Advertisement
Next Article