For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐயஹோ.. திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை பாரீர்!

09:10 AM Sep 20, 2024 IST | admin
ஐயஹோ   திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை பாரீர்
Advertisement

திருப்பதி என்றாலே பெருமாளும் லட்டும்தான் முதலில் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதம் என்றாலும் அது திருப்பதி லட்டுதான். இந்த திருப்பதி லட்டு திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது. அந்த பெயரைக் கூட யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்குத் திருப்பதி லட்டு பல பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது.

Advertisement

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் சூப்பரான சுவைக்குக் கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, நெய், பக்குவம் ஆகியவற்றைத் தாண்டிப் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருப்பதியில், லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது 3 நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்கிறது. இங்கு 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு ஆகியவனவாகும்.

Advertisement

இதில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது புரோகிதம் லட்டு. திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணத்தையும் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படுவதும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என குறிப்பிட்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தான உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகி பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது என்ற முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு தேசிய அளவில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கான வாய்ப்பே கிடையாது என்று தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியிருந்த நிலையில், ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ் ஷர்மிளா இது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த நிலையில் இன்று மாலை தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத்தின் ஆனந்தில் இருக்கும் தேசிய பால்வள வாரியத்தில் (NDDB) உள்ள கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (CALF) ஆய்வறிக்கை ஆகும். இந்த ஆய்வறிக்கையில் மாதிரிகள் அனுப்பப்பட்ட தேதி ஜூலை 9 என்றும், ஆய்வக அறிக்கை ஜூலை 16 அன்று வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இதுவரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Tags :
Advertisement