For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அந்தகன் - விமர்சனம்!

10:00 PM Aug 09, 2024 IST | admin
அந்தகன்   விமர்சனம்
Advertisement

ஹிந்தியில் ரிலீசாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் ஸ்பெஷாலிட்டியே அதன் திரைக்கதை பின்னல்தான்.அதாவது ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் யாரென்று ஹீரோவுக்குத் தெரியும். மேலும் அக் கொலையை எப்படியெல்லாம் மூடி மறைக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கொலைக்கு அவன் சாட்சியாக முடியாது. காரணம், அவன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அப்படி எதிர்பாராமல் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகள் , ஒரு பிரச்சனை முடிவதற்கு முன்பே வரும் இன்னொரு பிரச்சனை , யூகிக்க முடியாத கதாப்பாத்திரங்களின் இயல்புகள், திடீர் திருப்பங்கள் என முழு பேக்கேஜான ஒரு படம்தான் அந்தாதுன். இந்த மாதிரியான ஒரு படத்தை தமிழில் அந்தகன் என்ற டைட்டிலில் ரீமேட் - நோட் நோட் நாட் ரீ மேக் - செய்து அப்ளாஸ் அள்ளிக் கொண்டார் டைரக்டர் தியாகராஜன்

Advertisement

பார்வை இல்லாதவர் போல் வாழும் பியானோ கலைஞர் கிருஷ்ணாவுக்கு (பிரசாந்த்), லண்டனுக்குச் சென்று பெரிய மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அவரை மெய்யாலுமே பார்வை இல்லாதவர் என நம்பும் நாயகி பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி தருகிறார். அங்கு பிரசாந்த் பியானோ வாசிப்பதை பார்த்து தனது திருமண நாளில் தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க வரச் சொல்கிறார் ஆக்டராகவே வரும் கார்த்திக். அந்த கார்த்திக் வீட்டிற்கு பிரசாந்த் சென்றபோது கார்த்தி ஒய்ஃப் சிம்ரன் தனது காதலனான சமுத்திரகனியுடன் ஓரூடல் , ஈருயிராக இருப்பதை பார்த்து விடுகிறார். உடனே சிம்ரன் கார்த்திக்கை போட்டுத் தள்ளி விடுகிறார்.அதே சமயம் அதே வீட்டில் என்ட்ரி ஆகும் பிரசாந்த் நடந்ததைப் பார்த்த நிலையில்  கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் நடித்து  தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் காதலனாக வரும் சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் என்னும் அந்தாதுன் ஆகிய படத்தின் கதைக்களம்.

Advertisement

நாயகன் பிரசாந்தின் 50 படம் என்பதே தனி ஸ்கேல் .. அப்பாவி போல் ஓர் இசைக் கலைஞனாவும் கூஅவே சில பல டென்ஷன், குழப்பம் கொண்ட கேரக்டரின் வலுவை புரிந்து மிகப் பர்பெக்டான ஆக்டிங்கை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார் பிரசாந்த். குறிப்பாக கண் பார்வை தெரியுமா தெரியாதா என்ற சந்தேகத்தை சுற்றி இருப்பவர்களுக்கு எழுப்பி, கதையில் நடக்கும் களேபரத்தை கடைசி வரை சமாளித்து, கிடைக்கும் கேப்பில் எல்லாம் காமெடியில் சிக்ஸர் அடிக்கும் கேரக்ட்ராக இந்த முழு கதையும் தன் தோளில்தான் என்பதை உணர்ந்து பிரமாதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

எல்லோரையும் ‘ஓவர்டேக்’ செய்து நடிப்பால் திரையில் ஆளுமை செலுத்துகிறார். பிரியா ஆனந்த் குறைந்த திரைநேரம் எடுத்துக் கொண்டாலும் நிறைந்த வில்லத்தனத்தில் மட்டுமில்லாமல் எமோஷனலானசீன்களையும் கேஷூவலாக ஹேண்டில் செய்து தனித்து நிற்கிறார் .. ரியல் ஆக்டராக கார்த்தி, தனது ‘மவுன ராகம்’ படத்தைப் பார்ப்பது, ‘ஜீன்ஸ்’ பட ரெஃபரன்ஸ் ஆகியவை நினைவுகளை பகிர்வதெல்லாம் ரசிக்கவே வைக்கிறது. அதிலும் அந்த ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் இடம் பிடிக்கும் காட்சிகள் மெய்மறந்து கை தட்ட வைத்து விடுகிறது .இவர்களுக்கிடையே சமுத்திரக்கனியும் வழக்கம் போல் அக்குளில் புன் வந்த உடல்மொழியோடு வில்லத்தனத்தையும் கூடவே புதுசாக பயத்தில் நடுங்கும் உடல்மொழியில் சிரிப்பையும் குறைவின்றி வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். ஊர்வசி - யோகிபாபு காம்போ புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது.

ஒரு சஸ்பென்ஸ் படம் எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோள் தெரிந்த ரவி யாதவ் கேமரா கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் அவசர அவசரமாக ஓடவிட்டிருக்கிறது சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு. சந்தோஷ் நாராயணனின் இசையில் 'என் காதலும்' பாடலும், 'கண்ணிலே' பாடலும் மட்டும் நாட் பேட் சொல்ல வைக்கிறது .

ஆயுஷ்மான் குரானா ஆக்டிங்கில், ஶ்ரீராம் ராகவன் எழுதி, இயக்கிப் மெஹா ஹிட்வ் அடித்த 'அந்தாதுன்' மூவியின் தமிழ் மறு ஆக்கத்திற்கான முயற்சியில் ஹானஸ்டான சக்சஸை பெற்றிருக்கிறது தியாகராஜனின் டீம் . இதற்கு ஶ்ரீராம் ராகவன் - தியாகராஜன் - பட்டுக்கோட்டை பிரபாகர் கூட்டணியின் எழுத்து உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதும் உண்மை .

வழக்கம் போல் ஹிந்தி டாப் என்று சொல்லும் பட்டியலும் இருந்தாலும் தமிழில் ஹிட் பட்டியலில் சேர்ந்து விட்ட படமிது

மார்க் 4/5

Tags :
Advertisement