அமீகோ கேரேஜ் - விமர்சனம்!
ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம் அந்த அர்த்தத்தை இந்த தலைப்புக்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இதில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். வெறும் 152 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் ஒரு இளைஞர் தவறான பாதையை தேர்வு செய்தால் அவரது வாழ்க்கை எப்படி மாறும் என்பதை எடுத்து காட்டும் கதையிது..
அதாவது ஸ்கூல் ஸ்டூடண்டாக இருந்த மகேந்திர னுக்கும் , ரவுடி தசரதிக்கும் பார் வாசல் ஒன்றில் மோதல் ஏற்படுகிறது. கோபமடையும் மகேந்திரன் தசரதியை தாக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த தசரதி மகேந்திரனை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார். ஆனால் மகேந்திரனின் நண்பர் ஜி எம் சுந்தர் தலையிட்டு மகேந்திரனை தசரதியிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனாலும் மகேந்திரனுக்கும் தசரதிக்கும் மீண்டும் மீண்டும் பகை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜி.எம் சுந்தர் கஞ்சா விற்ற குற்றத்தில் ஜெயிலுக்கு சென்று விட மகேந்திரனை தீர்த்துக்கட்ட தசரதி ரவுடிகளை அனுப்புகிறார். அவரிடமிருந்து தப்பும் மகேந்திரன் தானே ஒரு ரவுடியாக மாறி தசரதி மற்றும் ரவுடிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் அமீகோ கேரேஜ்.
இதுவரை ஜூனியர் ஆர்டிஸ்டுகளில் ஒருவராக வலம் வந்த மகேந்திரன், பள்ளி பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்புகளுக்காக எந்தவித மெனக்கெடலும் மேற்கொள்ளாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார். இவ்வளவு தாடியுடன் பள்ளி மாணவரா? என்ற கேள்வியை யாராவது கேட்பார்கள் என்பதை ஃபீல் பண்ணி, அதற்கான ஒரு வசனத்தை பேசிவிட்டு கடந்து செல்பவர், நெக்ஸ்ட் சீனில் காலேஜில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிக்க , அவர் தம்பி என்று அழைத்தாலும், “அதெல்லாம் முடியாது..” என்று அடம் பிடிப்பது, அடுத்தடுத்த காட்சியில் பொறுப்பான பிள்ளையாக மாறி பணிக்கு செல்வது, திடீரென்று வரும் பிரச்சனையால ஆக்ஷன் அவதாரம் எடுப்பது என ருத்ரா கேரக்டருக்கு தன்னால் முடிந்த அளவு உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார்
ஹீயோயின் ஆதிரா கதை ஓட்டத்துக்கு வலு சேர்ப்பார் இருப்பார் என்று எதிர்பார்த்தால், வழக்கம் போல் டம்மி நாயகியாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் ரம்யா, நல்வரவு. ஆனால், அவரது காட்சிகள் குறைவாக இருந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.
அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர், இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் சாதாரணமாக பயணித்தாலும், அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காததாக இருக்கிறது.வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் மிரட்டலான தோற்றதோடு, நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்கள். மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை என்றாலும், உறுத்தலாக இல்லை.
ஒரு சினிமாவுக்கு தேவையான காதல், குடும்ப சென்டிமெண்ட், மாணவர்களின் கலாட்டா, இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு, துரோகம், யோசிக்காமல் எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று படத்தில் அனைத்து அம்சங்களுடம் ரன்னிங் டைம் கூட குறைவாக இருந்தாலும், திரைக்கதையில் போதிய அக்கறைக் காட்டாததால் ரொம்ப சுமாரான பட பட்டியலில் சேர்ந்து விட்டது.
மார்க் 2.25/ 5