For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அமெரிக்கா: டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

07:43 AM Jul 14, 2024 IST | admin
அமெரிக்கா  டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு
Advertisement

மெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பட்லர் பகுதியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பலமுறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.இதில் ட்ரம்ப் காதில் ரத்தம் வழிந்ததை பார்க்க முடிந்தது. உடனே அவரை பாதுகாப்பு வீரர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர். தற்போது டொனால்ட் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ட்ரம்ப் தரப்பு செய்தித் தொடர்பாளர் பேசுகையில், இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு நன்றி. உடனடியாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்து கொண்டார்.

Advertisement

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்நாட்டை ஆளப் போகும் அதிபர், துணை அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நேரடி போட்டியில் இருக்கின்றனர். இதையொட்டி பல்வேறு மாகாணங்களில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த சப்தம் கேட்டு அங்கு குழுமியிருந்த மக்கள் கீழே குனிந்தனர். மேடையில் பேசிக் கொண்டு இருந்த ட்ரம்பும் குனிந்தார்.

Advertisement

இதில ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இதில் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி அந்தோனி குக்லியல்மி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ஜூலை 13 மாலை ட்ரம்ப் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.உடனடியாக பாதுகாப்பு விஷயங்களை சீக்ரெட் சர்வீஸ் அமல்படுத்தியது. முன்னாள் அதிபர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் தெரியவரும் போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.ட்ரம்ப் அவசர அவசர அழைத்து செல்லப்பட்ட போது, தனது கைகளை உயர்த்தியவாறு Fight, Fight, Fight என்று முழக்கமிட்டுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் USA, USA, USA என பதிலுக்கு முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் தற்போது டொனால்ட் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ட்ரம்ப் தரப்பு செய்தித் தொடர்பாளர் பேசுகையில், இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு நன்றி. உடனடியாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்து கொண்டார். இந்த சூழலில் மற்றொரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement