தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆமாய்யா.. ஆமா.. கோமியத்தில் மருத்துவ குணமுண்டு - ஐஐடி காமகோடி!

08:27 PM Jan 20, 2025 IST | admin
Advertisement

சுவின் சிறுநீரை 'கோமியம்' என்ற பெயரில் ஒரு புனிதப் பொருளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் `கிருமிநாசினி’ என்பார்கள். பசுவின் கோமியத்தை வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாக, ஹோமங்களில், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது வழக்கம். பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் இருப்பது குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இன்றைய காலத்துக்குப் பொருந்துமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது, பசுவின் நிறத்துக்கேற்பக்கூட அதன் சிறுநீரின் குணாதிசயம் மாறுபடும் என்று ஆயுர்வேதம் கூறியிருக்கிறது. அந்தக் காலத்தில் நாட்டுமாடுகள் இருந்தன. அவை புல், வைக்கோல் போன்ற தாவர உணவுகளை உட்கொண்டு வளர்ந்தன. ஆனால், தற்போது, செயற்கை, நவீன உணவுகளே மாடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றுக்கு அவை தரும் சிறுநீருக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா என்பது இப்போதைக்கு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கடந்த ஜன.17-ல் நடந்த தனியார் நிகழ்வு ஒன்றில் பேசினார் ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. அமைச்சர் பொன்முடி, எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கோமியம் தொடர்பான காமகோடியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

Advertisement

இதை அடுத்து, சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (ஜன.20) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காமகோடியிடம் கேட்டப் போது, ''`கோமியம் தொடர்பாக அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை உங்களுக்கு அனுப்புகிறேன். கோமியத்தில் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றுக்கு எதிரான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது அறிவியல் பூர்வமாக அவற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை குறித்துதான் அன்றைக்கு நான் பேசினேன். எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான மொழியில் அவை உள்ளன. அவற்றை நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். பாக்டீரியா, பூஞ்சை, வீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக மருத்துவ குணங்கள் கோமியத்தில் உள்ளன. இதை நிரூபிக்க 5 ஆய்வுக் கட்டுரைகளும், ஒரு காப்புரிமையும் உள்ளன.

Advertisement

அன்றைக்கு நடந்த நிகழ்வில், அறிவியல் மற்றும் பசுக்கள் குறித்துப் பேசுமாறு என்னிடம் கேட்டார்கள். எனவே கோமியம், சாண எரிவாயு, இயற்கை விவசாயம் போன்ற 4-5 தலைப்புகள் குறித்து அன்றைக்குப் பேசினேன். அமேஸானில் கூட, பஞ்சகவ்ய கிரிதம் என்ற பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அந்தப் பொருளுக்குத் தகுந்த அங்கீகாரம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. நான் பேசுவது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. அந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

Tags :
cow urineIITKamakodi!Komiyammedicines
Advertisement
Next Article