தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறலாம்!

05:50 PM Jan 28, 2025 IST | admin
Advertisement

முன்னதாக சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்த உடன், பட்டாவை மாற்றம் செய்ய வாங்கப்பட்டு அந்த பகுதி வி.ஏ.ஓ. அல்லது தாலுகா அலுவலகம் செல்லவேண்டும். அங்குதான் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இதனால் பணம் மற்றும் நேரம் வீணானது.பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.தற்போது அதனை எளிமைப்படுத்த புதியதாக தமிழ்நிலம் எனும் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். tamilnilam.tn.gov.in/citizen-ல் பெயர், செல்போன் எண், முகவரி, இ-மெயில் முகவரியில் பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு , செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.

Advertisement

இந்நிலையில் இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அளவு, வரைபடங்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து வெளியான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கும், நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் அனைத்து சொத்துகளுக்கான பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் இப்போது செல்போண் எண் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பி. மூலம் தான் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதுவும் ஒரு செல்போனுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 முறை மட்டுமே ஆவணங்களை பெற முடியும். இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இப்போது உள்ள நடைமுறையின்படி, பட்டாவையும், அந்த நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாக தான் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. கொடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இனிமேல், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்துவிட்டாலே, பட்டாவுடன், அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட்-அவுட் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்பட்டது. எனவே அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அளவு, வரைபடங்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FAIRA

Tags :
LandLand mapland plotபட்டாவரைபடம்
Advertisement
Next Article