For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மே மாதம் நாடு முழுவதும் கிட்டதட்ட 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!- முழு விபரம்!

07:43 AM Apr 29, 2024 IST | admin
மே மாதம் நாடு முழுவதும் கிட்டதட்ட 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை   முழு விபரம்
Advertisement

ரும் மே மாதம் நாடு முழுவதும் கிட்டதட்ட 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு உள்ள விழாக்கள் மற்றும் தேர்தல் விடுமுறைகளை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மே மாதம் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள் வருமாறு:

மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள்
மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.
மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.
மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.
மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.
மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.

இந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருந்தாலும், வங்கிகளின் ஏடிஎம்கள் இந்த நாட்களில் பணி செய்யும் என்றும், அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement