For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

2024 சீசனிசில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விபரம்!

09:43 PM Nov 26, 2023 IST | admin
2024 சீசனிசில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விபரம்
Advertisement

டுத்தாண்டு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் நவ.26ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் டிரேடிங் முறையிலும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி இதுவரை 16 சீசன் ஐபிஎல் டி20 லீக் நடந்துள்ளது. 17-வது சீசனுக்கான ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டில் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று அதாவது நவம்பர் 26 ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

அந்த வகையில், 10 அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை அணி:

 தக்கவைத்துள்ள வீரர்கள்: தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷாக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்‌ஷனா.

விடுவித்துள்ள வீரர்கள்:பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகாலா.

மும்பை அணி:

தக்கவைத்துள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

விடுவித்துள்ள வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

ராஜஸ்தான் அணி:

ஜேசன் ஹோல்டர், ஜோ ரூட் , அப்துல் பாசித், ஆகாஷ் வாஷிஸ்த், குல்தீப் யாதவ், ஓபெட் மெக்காய், முருகன் அஸ்வின், கரியப்பா, கே.எம் ஆசிப் ஆகியோரை அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்துள்ளது.

பெங்களூர் அணி:

வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல்,டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல்,கேதர் ஜாதவ் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா, யாஷ் தயல், கே. எஸ் பரத், சிவம் மாவி, ஊர்வில் படேல், பிரதீப் சங்வான் ஆகியோரை அணியிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் விடுவித்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி:

ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ் , மனன் வோரா , ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, ஆர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர் ஆகியோரை அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட் விடுவித்துள்ளது.

டெல்லி கேப்பிடல் அணி:

ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோடி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

கொல்கத்தா அணி:

ஷர்துல் தாகூர், ஷாகிப் அல் ஹசன், லிட்டில் தாஸ், ஆர்ய தேசாய், டேவிட் வீஸ், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், உமேஷ் யாதவ், டிம் சௌதி , ஜான்சன் சார்லஸ் ஆகியோரை அணியிலிருந்து கொல்கத்தா அணி விடுவித்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷாருக் கான், ராஜ் பாவா, பால்தேஜ் தண்டா, மோஹித் ரதீ, பானுகா ராஜபக்சே ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவித்துள்ளது.

Tags :
Advertisement