For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வாட்ஸ் அப்பில் இப்படி மெசேஜ் வந்தா உஷார்!

09:25 PM Jun 16, 2024 IST | admin
வாட்ஸ் அப்பில் இப்படி மெசேஜ் வந்தா உஷார்
Advertisement

ண்மை காலமாக இந்தியாவில் பங்குச்சந்தை சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

Advertisement

1. உங்களை இன்ஸ்டாவிலோ அல்லது வாட்ஸ் அப்பிலோ திடீரென ஒரு குரூப்பில் சேர்ப்பார்கள்.

2. அந்த குரூப்பில் தினமும் பங்குச்சந்தை சார்ந்த நிகழ்வுகளை பதிவிடுவார்கள். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம்? நாளை பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் விளக்குவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பங்குச்சந்தை குறித்த அனைத்தும் தெரியும் என சில நாட்களிலேயே நம்மை அறியாமலே நம்ப வைத்துவிடுவார்கள்.

Advertisement

3. அடுத்தது, இன்றைக்கு இந்த பங்கு ஏறும் என பதிவிடுவார்கள், நீங்கள் இணையத்தில் சென்று பார்த்தால் அவர்கள் கூறியதை போலவே அந்த குறிப்பிட்ட பங்கு மதிப்பு ஏறி இருக்கும்.

4. அவர்களே அந்த குரூப்பில் ஆட்களை வைத்து நீங்கள் பரிந்துரைத்த இந்த பங்கினை வாங்கி நான் இவ்வளவு லாபம் பார்த்தேன் என போடச் சொல்வார்கள். தினமும் இப்படி ஒருவர் லாபமடைந்ததாக பதிவிடும் போது நமக்கும் இதை ஏன் முயற்சிக்க கூடாது என ஆசை வரும்.

5. ஒரு கட்டத்தில் நாங்கள் கூறும் பங்கை வாங்கி நீங்கள் நஷ்டமடைந்துவிட்டால் , நாங்கள் அந்த பணத்தை திரும்ப தருவோம் என கூறுவார்கள். படிப்படியாக உங்கள் ஆசையை அதிகரிப்பார்கள்.

6. பின்னர் குறிப்பிட்ட பங்குகளை கூறுவார்கள், நீங்கள் ஸெரோதா போன்ற தளங்களில் சென்று வாங்க முயற்சி செய்தால் அதனை வாங்கமுடியாது, இதற்கு தான் Institutional கணக்கு தேவை, எங்களிடம் ஈஸியாக இந்த கணக்கில் இணைந்து நீங்கள் டிரேடிங் செய்யலாம் என கூறுவார்கள்.

7. ஒரு சிறு தொகை போட்டு முயற்சி செய்து தான் பார்ப்போமே என நம்மை சிந்திக்க வைத்து, பிளே ஸ்டோரில் இல்லாத ஒரு செயலியை நமக்கு அனுப்பி போனில் பதிவிறக்கம் செய்ய வைத்து , அதில் டிரேட் செய்ய சொல்வார்கள்.

8. நம்மை தினமும் ஒரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப சொல்வார்கள், பின்னர் அந்த பணம் அவர்களின் செயலியில் உங்கள் கணக்கில் காட்டும் நீங்கள் அதை வைத்து டிரேடிங் செய்து லாபம் காண்பீர்கள். நீங்கள் தினமும் கூடுதலாக பணம் முதலீடு செய்யும் வகையில் ஒரு நாளைக்கு இரண்டு , மூன்று பங்குகளை பரிந்துரை செய்வார்கள்.

9. உங்களின் 100000 முதலீடு இவ்வாறாக 10 லட்சத்திற்கும் மேல் உயர்ந்திருக்கும். அப்பாடா இவ்ளோ லாபாமா சரி பணத்தை நாம எடுத்துக்கலாம் என நினைத்து அந்த செயலியில் வித்டிரா செய்ய முயற்சித்தால் ஏதேதோ காரணம் கூறி பணத்தை எடுக்கவே விட மாட்டார்கள்.

10. சில நாட்களில் உங்களால் அந்த செயலியையும் அணுக முடியாது, வாட்ஸ் குரூப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பீர்கள். இன்னுமா புரியலா உங்களின் முதலீட்டுக்கு நாமம் தான்!!

பெங்களூருவை சேர்ந்த நண்பர் ஒருவர் இப்படி பணத்தை இழந்துவிட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அண்மையில் கூட டெல்லியை சேர்ந்த ஒருவர் இப்படி வாட்ஸ் குரூப் பங்கு பரிந்துரையை நம்பி 9 கோடியை இழந்ததாக செய்தி ஒன்று படித்தேன். யாரோ முகம் தெரியாத நபருக்கு உங்கள் மீது என்ன அக்கறை இருக்க போகிறது? உங்களுக்கு முதலீடு செய்து லாபத்தை பெற்று தருவதற்கு அவர் யார்? உறவினர்கள், நண்பர்கள் கூட செய்யாத விஷயத்தை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?

யாரேனும் நான் சொல்லும் பங்கில் நான் சொல்லும் செயலியில் முதலீடு செய் லட்சம் லட்சமாக லாபம் கிடைக்கும் என கூறினால் அத்துடன் அவர்களின் சவகாசத்தையே விட்டு விடுங்கள்.

மோசடி செய்யும் நபர்களுக்கு நீங்கள் லட்சத்தில் ஒருவர், ஆனால் உங்களுக்கு இது வாழ்நாள் இழப்பு.

Tags :
Advertisement